|
அறல் - கருமணல்,
அறவாழி - தரும சக்கரம்,
அறவாழியன் - அருகக்
கடவுள்,
அறிவன் - அருகக் கடவுள்,
அறுத்திசைப்பு - வேற்றிசை
கலந்து வரும் யாப்பு வழு,
அறுத்துக்கொட்டு,
அறுதொழிலாளர் - வேதியர்,
அறு பிறவி - அற்ற பிறவி,
அறு பொருள் - சீவம், புற்
கலம், தருமம், அதருமம்,
ஆகாசம், காலம் என்பன,
அறுமுகத்தன் - முருகக்
கடவுள்,
அறுவர் - சூரியன், யமன்,
வாயு, இந்திரன், அசுவினித்
தேவர் இருவர்; கண்ணன்,
தருமன், வீமன், அருச்
சுனன், நகுலன், சகதேவர்,
அன்னோ - இரக்கக் குறிப்பு,
அன்னௌ - ‘அன்னோ’
என்பதன் மரூஉ,
அனங்கன் - மன்மதன்,
அனந்த சதுட்டயம் - அனந்த
ஞானம், அனந்த தரிசனம்,
அனந்த வீரியம், அனந்த
சுகம் என்பன.
அனு - மோனை எழுத்து,
அனு கரணம் - ஒலிக் குறிப்பு,
அனுங்க - வருந்த,
அனுப்பிராசம் - வழி எதுகை,
அனுலோமம் - வலப்பக்கம்,
அனைத்து - அவ்வளவு (‘எள்
ளனைத்தும் இடரின்றி’)
அனை வகை - அந்த வகை,
ஆ
ஆ - பெற்றம், மரை, எருமை
இவற்றின் பெண் பெயர்,
|
ஆஅல் - ஆரல் (கார்த்திகை
நட்சத்திரம்)
ஆக்கை - உடல்,
ஆகம் - மார்பு,
ஆகுதி - அக்கினியில் மந்திர
பூர்வ மாகச் செய்யும்
ஓமம்,
ஆசான் - பாலை யாழ்த் திற
வகை,
ஆசிரியக்கு - ஆசிரியத்துக்கு,
ஆசு - எதுகையிடையில் வரும்
ய், ர், ல், ழ் என்னும் ஒற்று,
ஆசையல்குல் - காமவிச்சையை
உண்டாக்கும் அல்குல்,
ஆடமை - அசையும் மூங்கில்,
ஆடவர் - வாலிபர்,
ஆடி -‘கண்ணாடி’ என்பதன்
முதற் குறை,
ஆடு:
மேடராசி,
விலங்குகளின் ஆண்,
ஆடு கழை - அசையும்
மூங்கில்,
ஆடை நூல் - நெசவு நூல்,
ஆண்டு - வயது (பிராயம்)
ஆணை - கட்டளை,
ஆதிசால் பா - வெண்பா,
ஆதி தீபகம் - முதனிலைத்
தீவகம்,
ஆதி நாதர் ஆய்ந்த நூல் -
சமணாகமம்,
ஆதி நாதன் - அருகக் கடவுள்,
ஆம்பல் :
அல்லி மலர்,
ஆம்பற் பண்,
ஆம்பலந்தீங்குழல் - குமுத
வடிவாக அணைசு பண்ணிச்
செறித்த இசைக்குழல்,
ஆய்:
ஆராய்ச்சி செய்,
தாய்,
|