அல்லுரிச்சீர் - அல்லாத உரிச்சீர்
கள்,
அல்வழி - அல்லாத இடம்,
அலகிடுதல் - செய்யுளில்
அசைக் கணக்கிடுதல்,
அலங்கடை - அல்லாத விடத்து,
அலகு - அளவு,
அலர்த்த வல்லார் - விளக்க
வல்லவர்,
அலந்தார் - வருந்தியவர்கள்,
அலமா - அசைய,
அலர் - பலரறிந்து கூறும் பழிச்
சொல்,
அலர்த்த வல்லார் - விளக்க
வல்லவர்,
அலர்ந்த தோற்றம் - விளங்கிய
காட்சி,
அலராசனன் - அருகக் கடவுள்,
அலவலைக்குயில் - விடாது
கூவுதலையுடைய குயில்,
அலவன் - நண்டு,
அலைத்தது - வருத்தியது,
அலைப்பட்ட - வருத்தப்பட்ட,
அலைப்பான் - கொல்லும்
பொருட்டு,
அலையல் - வருந்தாதே,
அலை வாழ்க்கை - கொலை
செய்து வாழும் வாழ்க்கை,
அவ்வளை - அழகிய வளை,
அவம் - வீண்,
அவலம் - துக்கம்,
அவற்கண்டு - அவனைப்
பார்த்து,
அவித்த - அழித்த,
அவிதல் - பணிதல்,
அவிந்தொழுகுதல் - பணிந்து
நடத்தல்,
அவியுணவினார் - தேவர்,
அவிர்ந்தது - விளங்கியது,
அவிழ்ப்பது - விடுகவிப்
|
பொருளை விடுப்பது,
அவிழும் - மலரும்,
அவுணர் - அசுரர்,
அவை - சபை,
அவையடக்கியல் - ‘வல்லாதன
சொல்லினும் அவற்றை
ஆராய்ந்து கொண்மின்’
என அவையகத்தாரெல்
லார்க்கும் வழிபடு கிளவி
சொல்லுதல்,
அழல் உளை - தீச்சுடர்
போலும் பிடரி மயிர்,
அழிசி காடு - அழிசியின்
ஆர்க்காடு என்னும் நகரம்,
அழுங்கல்:
ஆரவாரம்,
வருந்துதல்,
அளப்பருங்கடற்பெயர் அருந்
தவத்தோன் - அமிர்த
சாகரர்,
அளவை - பிரமாணம்,
அளறு:
நரகம்,
சேறு,
அளறுபட - சேறாக,
அளி - வண்டு,
அளியன் - அன்புடையான்,
அளைப்பள்ளி - வளையாகிய
படுக்கை,
அற்றம் - கேடு,
அற்றன்று - அது போன்றதன்று,
அறப்புணை - தருமத் தெப்பம்,
அறப்புறம் - ஆதுலர் சாலை
கடவுளர் ஆலயம் முதலியன,
அறப்புறம் - இறையிலி நிலம்,
அறமிரண்டு - இல்லறம், துற
வறம்,
அறமுதல் நான்கு - அறம்,
பொருள், இன்பம், வீடு
என்பன.
|