பக்கம் எண் :
 

 அரும்பத அகராதி                                      651

அயிராணி - இந்திராணி,
அயில் - வேலாயுதம்,
அரக்காம்பல் - செவ்வல்லி
மலர்,
அரக்கார்ந்த பஞ்சி -
செம்பஞ்சி,
அரசர் வியன்பா -
ஆசிரியப்பா,
அரத்த வாய் - பவளம்
போன்ற வாய்,
அரந்தை - துன்பம்,
அரவ வனப்பு - ஒலியழகு,
அரவித்தன - ஒலித்தன,
அரவிந்தம் - தாமரை,
அரவு:
(கேதுவென்னும்)
பாம்பு,
பாம்பு,
அரவொடு மோட்டாமை
பூண்ட முதல்வன்
சிவபெருமான்,
அரற்று - குறிஞ்சி யாழ்த்திற
வகை,
அராகம்:
பாலை யாழ்த்திற வகை,
கலிப்பாவின்
உறுப்புகளுள் ஒன்று,
அரி:
சிங்கம்,
செவ்வரி,
அரிக்கிணை - கிணைப்பறை
வகை,
அரிசந்தனம் - சந்தன வகை,
அரிது படக் காட்டல் -
அருமை தோன்றக்
காட்டுதல்,
அரிமா:
சிங்கம்,
நிரைநேர்,
அரிமா நோக்கு - சிங்க
 

நோக்காக முன்னும்
பின்னும் நோக்கும் சூத்திர
நிலை,
அரிமான் எருத்தம் சேர் அணை
- சிங்காதனம்,
அரியிளஞ் செங்காற் குழவி -
மென்மையும் இளமையும்
செம்மையும் வாய்ந்த
காலையுடைய குழந்தை,
அரில் - குற்றம்,
அருகல் - அருமையாதல்,
அருகுமலம் - கிட்டுகின்ற மலங்
கள்,
அருங்கயம் - பெருங்குளம்,
அருங்கல நூல் - அழகு நூல்,
அருங்கல மொழி - அழகு
செய்யுள் சொல்,
அருங்கவி - சித்திரக் கவி,
அருஞ்சமம் - கடும்போர்,
அருஞ்சுரம் - கடத்தற்கு அரிய
பாலைவனம்,
அருணம் - சிவப்பு,
அருத்திக்க - இரு சம பாகங்
களாகப் பிரிக்க,
அருந்து ஏமாந்தனம் - உண்ணு
தலை விரும்பினோம்,
அருப்பம் - கோட்டை,
அல்கல் - தங்குதல்,
அல்கலும் - நாடோறும்,
அல்கியார்த்த - நிலைபெற்று
ஒலித்த,
அல்கிரை - சிறு தீனி,
அல்குல்:
பக்கம்,
பிருஷ்டம்,
அல்லதூஉம் - அன்றியும்,
அல்லியம் - மாயவன் ஆடிய
கூத்து,
அல்லிருங் கூந்தல் - இருள்
போலும் கரிய கூந்தலை
யுடையவள்,