அஞ்சு - அச்சம்,
அட்ட - காய்ச்சிய,
அட்டான்:
அழித்தான்,
ஆக்கித் தந்தான்,
அட்டுபு - இட்டு,
அடக்கியல் - சுரிதகம்,
அடம்பி - அடம்ப மலர்,
அடுக்கம் - மலைச்சாரல்,
அடுக்கல் - மலை,
அடும்பு - மலர்க்கொடி வகை,
அடைச்சிய - சேரச் செய்த,
அடைத்த அரும்பொருள் - அர
நிறையாக விதிக்கப்பட்ட
அரும்பொருள்,
அடைப்பையான் - வெற்றிலை
மடித்துக் கொடுப்பவன்,
அண்ணாக்கு மாறு - வாய்
திறந்தழைக்கும் வகை,
அண்ணாத்தல் - வாய்திறத்தல்,
அண்ணினர் - நெருங்கி யிருப்
பவர்,
அணங்க வல்லாள் - வருந்த
வல்லவள்,
அணங்காகி - வருத்தமாகி,
அணங்காமை - வருந்தாமல்,
அணங்கு - துன்பம்,
அணங்கும் - வருந்தும்,
அணங்குறியினாள் - அஞ்சச்
செய்தவள்,
அணல் - அண்ணம்,
உள்மிடறு, கழுத்து, தாடி,
அணிகல நூல் - ஆபரண
சாத்திரம்,
அணி மகர வெல்கொடியான் -
மன்மதன்,
அணுக் கந்தம் - அணுத் தொகுதி,
அணைவு - புகலிடம்,
அத்துண் ஆடை - தைப்புண்ட
ஆடை,
|
அத்துவ யோகம் - நில
அளவை; ஒரு சந்தஸைப்
பிரத்தாரம் செய்ய
வேண்டினால் அதற்கு
எவ்வளவு இடம் வேண்டும்
என்பதை அறிவது,
அதி கண்டம் - செய்யுட் சீர்,
அந்தடி - முடிவடி,
அந்தத் தொடை - அந்தாதித்
தொடை,
அந்தரம் - பேதம்,
அந்தரித்தும் - மாறுபட்டும்,
அந்தௌ - ‘அந்தோ!’
என்பதன் மரூஉ,
அந்நலார் - அழகிய பெண்டிர்,
அந்நீர் இப்பி - அழகு வாய்ந்த
முத்துச் சிப்பி,
அநேகாந்த வாதம் - பல
பட்சங் களையும் கூறும்
ஆருகதத் தருக்கம்,
அம்பல் - சிலரறிந்து கூறும்
பழிச் சொல்,
அம்புத் தரங்கம் - அம்போ
தரங்கம்,
அம்போதரங்கம் - நீரில்
தோன்றும் அலைகள்,
அம்மருங்குல் - அழகிய
இடையை உடையவள்,
அம்மலர் - அழகிய மலர்,
அமரராசர் - தேவேந்திரர்கள்,
அமரீர் - தேவர்களே,
அமன்ற - நெருங்கிய,
அமித பதி கவி,
அமிழ்தளைஇ - இன்பம்
கலந்து,
அமை - மூங்கில்,
அமைதி - தன்மை,
அமையும் - பொருந்தும்,
அயன் - பிரமன்,
அயிர்ப்பு - குறிஞ்சி யாழ்த் திற
வகை,
|