அ
அஃகம்:
தானியம்,
முறைமை,
அஃகாய்தம் - ஆய்தக்
குறுக்கம்,
அஃகிய நாலுயிர் - குற்றிய
லிகரம், குற்றியலுகரம்,
ஐகாரக் குறுக்கம், ஒளகாரக்
குறுக்கம்,
அஃதான்று - அதுவன்றி,
அஃதும் - அதுவும்,
அஃதேல் - அப்படியானால்,
அஃறிணை - மக்கள் ஒழிந்த
பிற பொருள்கள்,
அஉ அறியா - எட்டும்
இரண்டும் அறியாத
(கபடற்ற),
அக்கரத்தாரணை - நவ
தாரணையுள் ஒன்று,
அக்கேனம் - ஆய்த எழுத்து,
அகடுற - நடுவு நிலைமை
பொருந்த,
அகணித - கணிக்கப்படாத
வனே,
அகப்படுத்தல் - தமக்குஆகச்
செய்தல்,
அகப்படுத்தார் - தமக்கு ஆகச்
செய்தார்,
அகம் முதல் நான்கு - அகம்,
அகப்புறம், புறம், புறப்
புறம் என்னும் பொருட்
பாகுபாடுகள்,
அகலம் - மார்பு,
அகவ - கூத்தாட,
|
அகவல் - ஆசிரியப்பா,
அகற்பு :
நீக்கம்,
பிரிவு,
அகறல் - விட்டு நீங்குதல்,
அகன்பொழில் - விசாலமான
சோலை,
அகன்றிசைப்பு - யாப்பு
முறையினின்று அகன்று
காட்டும் குற்றம்,
அகிலம் - பூமி,
அகைப்பு :
எழுச்சி,
இடை விட்டுச்செல்லுதல்,
கூறுபாடு
மதிப்பு,
முயற்சியாலுண்டானது,
அங்கப்பெருநூல் ஆதி - அங்காக
மம் முதலிய பெரு நூல்கள்,
அங்கபுவ்வம் - அங்காகமம்
பன்னிரண்டும் பூர்வாகமம்
பதினான்குமாகிய சமணர்க்
குரிய பரமாகமங்கள்,
அசுணம் - அசுணமா,
அசுரீர் - அசுரர்களே,
அசைஇய - இயங்கிய,
அசோகு - அருகக் கடவுளுக்
குரிய அசோக மரம்,
அஞ்சக வூண்,
அஞ்சனம்:
‘அஞ்சனகேசி’ என்னும்
இறந்துபட்ட ஒரு தருக்க
நூல்,
மை,
அஞ்சிறை (அகம் சிறை)
உட்சிறகு,
| |