பக்கம் எண் :
 

 700                                   யாப்பருங்கல விருத்தி

வெள்ளில் - பிணந்தூக்கும்
பாடை,
வெள்ளிலோத்திரம் - வெண்
பூவுள்ள ஒரு மர வகை,
வெள்ளை - வெண்பா,
வெளிய - வெண்மை
யானவை,
வெளிற்றுப்பனை - வயிரமற்ற
பனைமரம்,
வெற்பன் - குறிஞ்சி நிலத்
தலைவன்,
வெற்பு - மலைச்சாரல்,
வெறுக்கை - செல்வம்,
வெறுத்திசைப்பு - யாப்பின்
ஓசைக் குற்றத்தின் வகை,
வென்வேல் - வெற்றிவேல்,
வென்றி - வெற்றி,

வே

வேங்கை - வேங்கை மரம்,
புலி,
வேண்டிற்றா - (வேண்டின் தா)
விரும்பினாயாயின் கொடு,
வேணு - மூங்கில்,
வேதவாய் மேன்மகன் - வேதி
யன்,
வேதிகை - மண மேடை,
வேதினம் - அரிவாள்,
 

வேது கொளீர் - வேறுபடுத்து
வீர்,
வேம்பு - வேப்பங்காய்,
வேய் - மூங்கில்,
வேய்ந்த - சூடிய,
வேரல் - மூங்கில்,
வேரி - தேன்,
வேலை - கடல்,
வேழம் - யானை,
வேள்விக் களம் - யாகசாலை,
வேளாண்மை - உபகாரம்,
வேனிலான் - மன்மதன்,

வை

வைகல் - நாள்,
வைப்பு - சுரிதகம்,
வையக்கு - உலகத்துக்கு,
வையம்:
பூமி,
பூமியிலுள்ளவர்கள்,
வையெயிறு - கூர்மையான
பல்,
வைளவம் - செந்துறை வெண்
டுறைப் பாட்டுள் ஒரு வகை,

வௌ

வௌவல் - அபகரியாதே,
வௌவி - கவர்ந்து.