என்பது குறிக்கும் சூத்திரம்,
விலக்கு - நாடக உறுப்பு வகை,
விலங்கரைசு - சிங்கம்,
விலையாள் - அடிமைப் பெண்,
விழவுக்களம் - திருவிழா
நடைபெறுமிடம்,
விழுச் செல்வம் - சிறப்புடைய
செல்வம்,
விழுத்தாயம் - பெருங்கொடை,
விழும நோய் - துன்பம் தரும்
காமநோய்,
விழுமிய - சிறந்த,
விழைதகு பூண் முலை - விரும்
பத் தகுந்த பூண் முலை,
விளச்சீர் - நிரையசையால் முடி
யும் ஈரசைச்சீர்,
விளம்பனம் - ஆதிகால மக்களின்
வழக்க ஒழுக்கங்களை ஆடி
யும் பாடியும் புலப்படுத்துதல்,
விளர்ப்பு - வெளுத்தல்,
விளித்தல் - கூப்பிடுதல்,
விறலியர் - பாணச் சாதிப்
பெண்டிர்,
வினைக்காதி வென்ற பிரான் -
காதிகன்மங்களை வென்ற
அருகக் கடவுள்,
வினையின் தொகை - காதி
கன்மங்களின் தொகுதி,
வீ
வீட்டுக - அழிப்பாயாக,
வீடான் - விடாதவன்,
வீடிய மானின் அதள் - அழிந்த
யானையின் தோல்,
வீடு பேறு - மோட்சச்
செல்வம்,
வீடு போழ்தில் - இறக்கும்
பொழுதில்,
வீணை பண்ணி - வீணை
வாசித்தல்,
|
வீயாத் தமிழ் - என்றும்
அழியாத தமிழ் மொழி,
வீயுமுயிர் - இறக்கும் உயிர்,
வீவது - அழிவது,
வீவு - அழிவு,
வீழ் குயில் - விரும்பிய குயில்,
வீளை - சீழ்க்கை,
வீறழித்தல் - பயனறச் செய்தல்.
வெ
வெஃகா - காஞ்சிபுரத்திலுள்ள
திருமால் திருப்பதிகளுள்
ஒன்று,
வெஃகுவார் - விரும்புவர்,
வெங்களம் - போர்க்களம்,
வெஞ்சிலை - கொடிய வில்,
வெஞ்சுரம் - கொடிய பாலை
வனம்,
வெட்சி - பகைவரின் பசுக்
கூட்டத்தைக் கவர்வதைக்
கூறும் புறத்துறை,
வெண்குடை மூன்று - அருகக்
கடவுளுக்குரிய முக்குடை,
வெண்குறள் - குறள் வெண்பா,
வெதிர் - மூங்கில்,
வெதிர் கலங்க - நடுக்கமடைய,
வெம்முலை - விருப்பத்தை
விளைக்கும் முலை,
வெய்யர் - கொடியவர்,
வெய்யோன் - சூரியன்,
வெயிற் கதிர் - சூரிய கிரணம்,
வெரின் - முதுகு,
வெரீஇ - அஞ்சி,
வெருகு - ஆண் பூனை,
வெருவுப் பாம்பு - அச்சம்
விளைக்கும் பாம்பு,
வெல்கிற்கும் - வெல்லும்,
வெள்ளம்பரக்கும் - கங்கை
பரவும், (வெள் + அம்பு +
அரக்கும்) மொட்டம்புகள்
அழுத்தும்,
|