பக்கம் எண் :
 

 உறுப்பியல் - சீர் ஓத்து                                   73

     ‘நாலசைச்சீர் வெண்பாவில் நண்ணா; அயற்பாவில்
     நாலசைச்சீர் நேரீற்ற நாலிரண்டாம்;- நாலசைச்சீர்
     ஈறுநிரை சேரின் இருநான்கும் வஞ்சிக்கே
     கூறினார் தொல்லோர் குறித்து.’

 என்னும் புறநடையானும், பிறவாற்றானும் விளங்கக் கூறினார் என்க.

     இனிப் பிற நூலுட் கூறுமாறு:

     ‘இயற்சீர் உரிச்சீர் எனவிரு சீரும்
     மயக்க முறைமையின் நால்வகைப் பாவும்
     இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும்.’

     ‘உரிச்சர் விரவ லாயு மியற்சீர்
     நடக்குன ஆசிரி யத்தொடு வெள்ளை
     அந்தம் தனியாய் இயற்சீர் கலியொடு
     வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே.’

     ‘நாலசை யானடை பெற்றன வஞ்சியுள்
     ஈரொன் றிணைதலும் ஏனுழி ஒன்றுசென்
     றாகலும் அந்தம் இணையசை வந்தன
     கூறிய வஞ்சிக் குணத்த ஆகலும்
     ஆகுன என்ப அறிந்திசி னோரே.’

 என்றார் காக்கைபாடினியார்.

     ‘நேரீற் றியற்சீர் கலிவயின் இலவே;
     வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே.’

 என்றார் நற்றத்தனார்.

     ‘ஓசையின் ஒன்றி வரினும்வெண் சீரும்
     ஆசிரிய அடியுட் குறுகும் என்ப.’

     ‘அகவலுள் தன்சீர் வெண்சீர் ஒருங்கு
     புகலிற் கலியுடன் பொருந்தும் என்ப.’


  குறிப்பு : நண்ணா - பொருந்தா; தொல்லோர் - பழைய ஆசிரியர்கள்; இனத்தின் மூன்று - பாவினங்களாகிய தாழிசை துறை விருத்தம் - என்னும் மூன்று;

  தனியாய் - நேரசையாய்; ஏனுழி - பிறவிடத்து; இணையசை - நிரையசை.