|
‘விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி
மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே.’
என்றல்லது ‘இயற்சீரும் உரிச்சீரும் விரவியும் வரும்; பொதுச்சீர் அருகியும்
வரும்; இயற்சீரும் உரிச்சீரும் வேறு வேறாகியும் வரும்; நிரை யீறாகிய
பொதுச் சீர் வஞ்சியுள்ளே வரும்; வஞ்சியுரிச்சீர் வெண் பாவினுள் வரப்
பெறா; நேரீற்றியற்சீர் ஒத்தாழிசைக் கலிப்பாவுள்ளும், வஞ்சிப்பாவின்
இறுதியும் வரப்பெறா; என்று இவ்வாறு கூறிற்றில ரேனும், ‘உரையிற்
கோடல்’1 என்னும் உத்தியானும், ‘பிறநூன் முடிந்தது தானுடம் படுதல்’2
என்பதனாலும் இவ்வாறு உரைக்கப்பட்டது.
‘அரையளபு குறுகல் மகரம் உடைத்தே;
இசையிட னருகும் தெரியுங் காலை.’3
எனத் தொல்காப்பியத்துள் இன்னவிடத்துக் குறுகும் என்று யாப்புறுத்துக்
கூறிற்றில்லையேனும், ‘உரையிற்கோடல்’ என்னும் உத்தி பற்றி ‘வகரத்தின்
பின் மகரம் குறுகும்’,4 என்று விருத்தியுள் விளங்கக் கூறினார். அதுபோலக்
கொள்க. அவிநயத்துள்ளும்,
‘முதலிடை நுனிநாப் பல்லிதழ் மூக்கிவை
வன்மை முதலாம் மும்மையும் பிறக்கும்.’
எனப் பொது வகையாற்கூறி, இன்னவிடத்து இன்ன எழுத்துப் பிறக்கும்
என்று விருத்தியுள் விளங்கக் கூறினார். அதுபோலக் கொள்க.
இது பொருந்தாது.
‘வகார மிசையும் மகாரம் குறுகும்’5
என்று போக்கிச் சொன்னார் ஆகலானும், இன்னவிடத்து இந்த எழுத்துப்
பிறக்கும் என்று கணக்கியலுட் புறநடை எடுத்தோதினார் அவிநயனார்
ஆகலானும், இந்நூலுடையாரும் ‘மாஞ்சீர் கலியுட்புகா’6 என்னும் இதன்
புறநடையானும்,
1,2 நன். பாயி. 14:166, தொல். எழுத். சூ. 13. 3,4 தொல், எழுத்து. சூ. 330
காண்க. 5. தொல் எழுத்து சூ. 330. 6. யா. கா. 40
குறிப்பு : யாப்புறுத்துக் கூறல் - வலியுறுத்துக் கூறுதல்.
|