| | 'பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகுந் தேங்காத 11கரவினையுந் தெளியாத விருளிடைக்கட் குடவரைவேய்த் தோளிணைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த் தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ ; |
இவை மூன்றுந் தாழிசை. |
| | 'தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில் போதுறு 12நறுமலர் புதுவிரை தெரிதரு கருநெய்தல் விரிவன கழி தீதுறு திறமறு கெனநனி 13முனிவன துணையொடு பிணைவன துறை மூதுறு 14மொலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர் புடையது கடல் |
இவை நான்கும் அராகம். |
| | 'கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனால் இடுங்கழி யிராவருதல் வேண்டாவெண் றுரைத்திலமோ 'கருநிறத் 15துறுதொழிற் கராம்பெரி துடைமையால் இருணிறத் தொருகான லிராவார லென்றிலமோ ; |
இவை நாற்சீர் ஈரடி யிரண்டு அம்போதரங்கம். |
| | 'நாணொடு 16கழிந்தன்றாற் பெண்ணரசி நலத்தகையே துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே நயப்பொடு கழிந்தன்றா 17னனவனு நன்னுதற்கே ; |
இவை நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம். |
| | 'அத்திறத்தா லசைந்தன தோள் அலரதற்கு மெலிந்தன கண் பொய்த்துரையாற் புலர்ந்தது முகம் பொன்னிறத்தாற் போர்த்தன முலை அழலினா லசைந்தது நகை அணியினா லொசிந்த திடை |
|
(பி - ம்.) 11. கரவினாற்றெளி. 12. நறுவிரை புதுமலர் விரிதரு. 13. துணையொடு நனைசினை பிணைவன. 14. மொழியொடு சுரிகெழு மொலிகலி முடிதொடர். 15. தெழுதொழிற். 16. கலந்தன்றாற். 17. னனவினு. |