| சிலமுறை யல்லது செல்வங்க ணில்லா இலங்கு மெறிபடையு மாற்றலு மன்பும் கலந்ததங் கல்வியுந் தோற்றமு மேனைப் பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும் விலங்கிவருங் கூற்றை விலக்கலு மாகா அனைத்தாத னீவிருங் காண்டிர் - நினைத்தக்க கூறிய வெம்மொழி 2பிறழாது தேறிநீ ரொழுகிற் சென்றுபயன் றருமே. |
இது மெய்ப்பொருளே சொன்னமையால் வாயுறை வாழ்த்து மருட்பா. என்னை? |
| '(6) வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொற் றாங்குத லின்றி வழிநனி பயக்குமென் றோம்படைக் கிளவியின் வாயுறுத் 2தன்றே' |
(பொருள், சூ. 424.) |
என்றார் தொல்காப்பியனார். |
| '(7) பல்யானை மன்னர் முருங்க வமருழந்து கொல்யானை தேரொடுங் கோட்டந்து நல்ல தலையாலங் கானம் பொலியத் தொலையாப் படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞர் அடுகளம் வேட்டோன் மருக வடுதிறல் ஆளி நிமிர்தோட் பெருவழுதி யெஞ்ஞான்றும் ஈர முடையையா யென்வாய்ய்ச்சொற் கேட்டி உடைய வுழவரை நெஞ்சனுங்கக் கொண்டு |
|
(6) வாயுறை வாழ்த்து - மருத்து போன்ற வாழ்த்து ; வாயுறை - மருந்து. கடு - கடுக்காய். ஓம்படைக் கிளவி - பாதுகாத்துச் சொல்லும் சொல். வேம்பும் கடுவும் போல முதற்கண் தோன்றினும் பின்னர் நல்லன வாகி உறுதிபயக்கும் சொல்லை வெஞ் சொல் என்றார். (7) கோட்டந்து - கொள்ளுதலைச் செய்து. மருக - வழித் தோன்றலே. அனுங்கல் - கெடுதல். மழவர் - வீரர். மன்றம் மறுக - நியாய மன்றத்துப் பெரியார் வகுந்த. அவையார் - நீதிமன்றத்தோர் குழிசி - மிடா; என்றது சோற்றுக்கு ஆதாரமாக உள்ளதை. ஒட்டார் - பகைவர். இனனாகி. இனத்தவனாகி, |
|
(பி - ம்.) 2. பிழையாது. 3, தற்றே, |