| வருங்கா லுழவர்க்கு வேளாண்மை செய்யல் மழவ ரிழைக்கும் வரைக்கா 4ணிதியீட்டம் காட்டு மமைச்சரை யாற்றத் தெளியல் 5அமைத்த வரும்பொரு ளாறன்றி வௌவல் இனத்தைப் பெரும்பொரு ளாசையாற் சென்று மன்ற மறுக வகழாதி யென்று மறப்புற மாக மதுரையா ரோம்பும் அறப்புற மாசைப் படேற்க வறத்தால் அவையார் கொடுநாத் திருத்தி நவையாக நட்டார் குழிசி சிதையாதி யொட்டர் செவிபுதைக்குந் தீய கடுஞ்சொற் கவியுடைத்தாய்க் கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகிச் செற்றார்ச் செறுத்துநிற் சேர்ந்தாரை யாக்குதிநீ அற்ற மறிந்த வறிவினாய் - மற்றும் இவையிவை வீயா தொழுகி னிலையாப் பொருகட லாடை நிலமகள் ஒருகுடை நீழற் றுஞ்சுவண் மன்னே.' |
இது வியப்பின்றி உயர்ந்தோர்கண் 6அவிந்தொழுகல் கடனென்று அரசர்க்கு உரைத்தமையாற் செவியறிவுறூஉ மருட்பா. என்னை? |
| '(8) செவியுறைதானே, பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே' |
(பொருள். சூ. 426.) |
என்றார் தொல்காப்பியனார். |
'என்று இப்பொருண் மிசை' என்று மிகுத்துச் சொல்லியவதனால், இந் நான்கு பொருண்மேலு மன்றி மருட்பா வரப்பெறா வெனக் கொள்க. என்னை? |
| 'புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றுந் திண்ணிதிற் றெரியின் |
|
(8) செவியுறை - செவிமருந்து. பொங்குதல் - பெருக்கம். அவிதல் - அடங்கி வாழ்தல். அடங்கி வாழ்வாருக்குப் புகழாதலான் இது வாழ்த்தின்பாற்பட்டது. |
|
(பி - ம்.) 4. னிதியீட்டம். 5. படைத்த. 6. வியந்தொழுகல். |