| வெண்பா வியலினு மாசிரிய வியலினும் பண்புற முடியும் 8பாவின வென்ப' |
(பொருள். சூ. 473.) |
என்றார் தொல்காப்பியனார். |
'பண்பார் புறநிலை' என்றும், 'ஒண்பாச் செவியறிவு' என்றும் சிறப்பித்தவதனால், புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉம் இவ்வாறன்றி வெண்பாவேயாயும் ஆசிரியமேயாயும் வரப்பெறும்; கலியும் வஞ்சியுமாய் வரப்பெறாவெனக் கொள்க. |
'ஊனமில்லா வெண்பா' என்று சிறப்பித்தவதனால் வேற்று வண்ணம் விரவாது வெள்ளை வண்ணம் எல்லா வண்ணத்துள்ளுஞ் சிறப்புடைத்தாய் மங்கலமரபிற்றாய் அவ்வாறே வேற்றுத் தளையும் அடியும் விரவாமையின் எல்லாப் பாவினுள்ளும் வெண்பாச் சிறப் புடைத்தென்று முன்வைக்கப்பட்டது என்று கொள்க. |
| 'வேதவாய் மெய்ம்மகனும் வேந்தன் மடமகளும் நீதியாற் சேர்ந்து நிகழ்ந்த நெடுங்குலம்போல் (9) ஆதிசால் பாவு மரசர் வியன்பாவும் ஓதியவா றோத மருட்பாவென் றோங்கிற்றே.' 'பண்ணுந் திறமும்போற் பாவு மினமுமாய் வண்ண விகற்ப வகைமையாற் - பண்மேற் றிறம்விளரிக் கில்லதுபோற் செப்ப லகவல் இசைமருட்கு மில்லை யினம்.' [' தென்ற லிடையுந் திருநுதல் வேர்வும் பலமுறையென் றொன்றிய பாவும்பல் யானையு மென்பவொண் போதமர்ந்த பொன்றிக ழோதி புறநிலை கைக்கிளை வாயுறைவாழ்த் தென்றிவற் றிற்குஞ் செவியறி விற்கு மிலக்கியமே.' |
இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே மருட்பா நான்கிற்குங் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க. |
3. செய்யுளியலோத்து முற்றும். |
|
(9) ஆதிசால்பா - அந்தண சாதிப்பா ; என்றது வெண்பாவை. அரசர் வியன்பா - ஆசிரியப்பா. |
|
(பி - ம்.) 8. பாங்கினவாகும். |