3. ஒழிபியல் |
எழுத்துக்களின் புறனடை |
| 36. சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இ உ அளபோ டாரு மறிவ ரலகு பெறாமையை காரநைவேல் ஒருங் குறிலிய லொற்றள பாய்விடி னோரலகாம் வாரும் வடமுந் திகழு முகிண்முலை வாணுதலே. |
எ....கை. இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் உறுப்பிய லோத்தி னுள்ளும் செய்யுளிய லோத்தினுள்ளும் சொல்லா தொழிந்த 1பொருளின் இயல்புகளை உணர்த்திற்றாதலால் ஒழிபிய லோத்து என்னும் பெயர்த்து. |
இவ்வோத்தினுள் இத்தலைக் காரிகை என்னுதலிற்றோ எனின், ஒருசார் எழுத்துக்கட்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்....ற்று. |
'சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இ, உ, அளபோடு ஆரும் அறிவர் அலகு பெறாமை' - என்பது சீருந் தளையுங் கெடவந்த விடத்துக் குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் உயிரளபெடையும் அலகு காரியம் பெறா எ - று. |
'ஒற்றளபாய்விடின் ஓர் அலகாம்' என்றுரைத்தமையால், ஈண்டு உயிரளபெடையே கொள்ளப்பட்டது. |
'சீரும் தளையும் சிதையிற் சிறிய இ உ அளபோடு அலகு பெறா' என்னாது 'ஆரு மறிவர்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் குற்றிய லிகரக் குற்றிய லுகரங்கள் ஒற்றியல்பினவாய் நிற்கும், உயிரள பெடை நெட்டெழுத்தியல்பிற்றாய் நிற்கும், அலகிடு மிடத்து எனக் கொள்க. |
'எதிரது மறுத்தல்' என்னும் இலக்கணத்தாற் சீருந் தளையுந் 2திருந்த நிற்புழி சிறிய இ உ அளபோடு ஆரும் அறிவர் அலகு பெறுதல் என்பதாயிற்று. சீருந் தளையுங் கெடாமல் வந்த இடத்துக் குற்றியலிகரக் குற்றியலுகரம் உயிரளபெடைகள் அலகு காரியம் பெறும் எ - று. |
|
(பி - ம்.) 1. பொருளை யுணர்த்தினமையின். 2. திருந்தி. |