இன்னும் 'ஆரும் அறிவர்' என்று சிறப்பித்தவதனால் அவை அலகு காரியம் பெறும் பொழுது குற்றியலிகரக் குற்றிய லுகரமும் குற்றெழுத்தின் பயத்தவாய் நின்று அலகு பெறும் எனக் கொள்க. |
உயிரபெடைகள் அலகு காரியம் பெறுமாறு தத்தங் காரிகையுட் போக்கிச் சொல்லுதும். |
வரலாறு |
வெண்பா |
| ' (1) சிறுநன்றி யின்றிவர்க்கியாஞ் செய்தக்கா னாளைப் பெறுநன்றி மன்னும் பெரிதென் - றுறுநன்றி தானவாய்ச் செய்வதூஉந் தானமன் றென்பவே வானவா முள்ளத் தவர்.' |
இதனுள், 'இன்றிவர்க்கியாம்' என்புழிக் குற்றிய லிகரம் வந்து [வெண்பாவினுள்] வஞ்சி யுரிச்சீராயிற்று. வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் விரவும் என்னும் ஓத்திலாமையால் வெண்பா அழிய நிற்கு மாதலின் ஈண்டுக் குற்றியலிகரத்தை இவ்விலக்கணத்தால் அலகு பெறா தென்று களையச் சீர் சிதையாதாம். |
குறள் வெண்பா |
| 'குழலினி தியாழினி தென்ப தம்மக்கள் மழலைச்சொற் கேளா தவர்.' |
(குறள். 66.) |
| 'அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் றினல்.' |
(குறள். 254.) |
இவற்றுட், 'குழலினி தியாழினி' தென்புழி ஆசிரியத்தளையும், 'அருளல்ல தியாதெனி' லென்புழிக் கலித்தளையும் வந்து 'வெள்ளைத் தன்மை குன்றிப் போஞ்சீர் கனி புகிற் புல்லாதயற்றளை' (கா. 38) என்னும் 3இலக்கணத்தோடு மாறுகொள்ளும் ஆதலான் |
|
(1) பெரிது மன்னும் என்று. அவாய் - விரும்பி. வான் அவாம் உள்ளத்தவர் - விண்ணுலகை விரும்பும் மனத்தவர். |
|
(பி - ம்.) 3. இலக்கணத்தோடும், வெள்ளையுட் பிறதளை விரவா வல்லன, எல்லாத் தளையு மயங்கியும் வழங்கும்' (யா. வி. சூ. 32.) என்னும் இலக்கணத்தோடும். |