ஈண்டுக் குற்றிய லிகரத்தை இவ்விலக்கணத்தான் அலகு பெறா தென்று களையச் சீருந் தளையுஞ் சிதையாவாம். |
ஈண்டுக் குற்றிய லிகரத்தை இவ்விலக்கணத்தான் அலகு பெறா தென்று களையச் சீருந் தளையுஞ் சிதையாவாம். |
வஞ்சிப்பா |
| (2) கொன்றுகோடுநீடு 4குருதிபாயவும் 5சென்றுகோடுநீடு செழுமலைபொருவன வென்றுகோடுநீடு விறல்வேழம் என்றுமூடுநீடு பிடியுளபோலும்அதனால் இண்டிடை யிரவிவ ணெறிவரின் வண்டுண் கோதை யுயிர்வா ழலளே.' |
இக்குறளடி வஞ்சிப்பாவினுட் குற்றிய லுகரம் பல வந்து ஐயசைச் சீரும். ஆறசைச் சீரும் வந்தன; அவ்வாறு வருக என்னும் ஓத்தில்லாமையால் ஆண்டுக் குற்றுகரங்களை இவ்விலக்கணத்தால் அலகு பெறா என்று களையச் சீருந் தளையுஞ் சிதையாவாம். |
இனி, உயிரளபெடைக்குச் சொல்லுமாறு : |
வெண்பா |
| ' (3) பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள் சொல்லுக்குத் தோற்றின்னுந் 6தோன்றிலவால் - நெல்லுக்கு நூறோஒநூ றென்பா ணுடங்கிடைக்கு மென்முலைக்கும் மாறோமா லன்றளந்த மண்.' |
இதனுள், 'நூறோஒ நூ' றென்புழிப் பண்ட மாற்றின்கண் அளபெடை (4) அநுகரணம் வந்து வெண்பாவினுள் நாலசைச் சீராயிற்று. அவ்வாறு வருக என்னும் ஓத்தில்லாமையால் இவ் |
|
(2) கோடு - யானையின் தந்தம், மலையின் சிகரம், சங்கு, யானையின் மத்தகத்திற் சங்கம்; சீவக 2306 ஊடும் பிடி. இண்டு - ஒரு முட்செடி. (3) முல்லை பல்லுக்குத் தோற்ற. இடையும் முலையும் மால் அளந்த உலகினும் பெருமையுடையன. (4) அநுகரணம் - ஒலிக்குறிப்புக்கேற்ற எழுத்தில் ஒன்றும் பலவும் வந்து செய்யுளடியைப் பிழைபடா வண்ணம் நிரப்புவது. |
|
(பி - ம்) 4. குருதி மாறவும், 5. சென்றுசென்றுநீடு. 6. தூற்றினவால். |