பக்கம் எண் :
 

ஒழிபியல் 'சீருந் தளையுஞ்'

141

 
     வாறு அலகிட்டு உதாரண வாய்பாட்டால் ஓசை யூட்டும்பொழுது ஓசை யுண்ணாது
செப்பலோசை அழிந்து நிற்குமாதலால் ஈண்டு உயிரளபெடையை இவ்விலக்கணத்தான்
அலகு பெறாதென்று [களைந்து] நெட்டெழுத்தே போலக் கொண்டு அலகிடச் சீரும்
தளையும் சிதையாவாம்.
 

வெண்பா

' (5) இடைநுடங்க வீர்ங்கோதை பின்றாழ வாட்கண்
புடைபெயரப் போழ்வாய் திறந்து - கடைகடையின்
உப்போஒ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவற்
கொப்போநீர் வேலி யுலகு.'
 
     இதனுள் 'உப்போஒ' என்புழிப் பண்டமாற்றிக்கண் அளபெடை யனுகரணம் வந்து
கலித்தளை (6) தட்டு, 7அவ்வாறு வரும் இலக்கணம் இன்மையான் அலகிட்டு உதாரண
வாய்பாட்டால் ஓசை யூட்டினும் ஓசை யுண்ணாது செப்பலோசை யழிந்து வருமாதலான்,
ஈண்டு உயிரளபெடையை [இவ்விலக்கணத்தால்] நெட்டெழுத்தே போலக் கொண்டு
அலகிடத் தளை சிதையாதாம்.
 
     இனிக் குற்றிய லிகரக் குற்றியலுகரங்கள் குற்றெழுத்தே போல நின்று அலகு
பெறுமாறு.
 

வெண்பா

  ' (7) வந்துநீ பேரி னுயிர்வாழும் வாராக்கான்
முந்தியாய் பெய்த வளைகழலும் - முந்தியாம்
கோளானே கண்டநங் கோல்குறியா யின்னுமோர்
நாளானே நாம்புணரு மாறு'
 
     இதனுள் 'வந்துநீ' என்புழிக் குற்றியலுகரமும் 'முந்தியாய்' என்புழிக்
குற்றியலிகரமும் சீர்தளை சிதையாமல் வந்து திருந்தி நிற்றலிற் குற்றெழுத்தின்
பயத்தவாய் அலகுபெற்றவாறு கண்டு கொள்க.
 

     (5) கடைகடையின் - முன்றில் தோறும்.

      (6) தட்டு - ஒன்றி.

      (7) யாய் - தாய். கோள் - கொள்கை. கோல் குறியாய் - கோல் அடையாளமாக.

 

     (பி - ம்.) 7. வெண்பா வழிய நிற்கு மாதலின் ஈண்டு.