கூட்டி உறழ இரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டெழுத்தாம் எனக் கொள்க. அவற்றுள் நேரசை முதலாகிய காரிகை ஒற்றொழித்து ஓரடிக்கு எழுத்துப் பதினாறும், நிரையசை முதலாகிய காரிகை ஒற்றொழித்து ஓரடிக்கு எழுத்துப் பதினேழும் எனக் கொள்க. என்னை? |
|
| (17) ['அடியடி தோறு மைஞ்சீ ராகி] முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாக் கடையொரு சீரும் விளங்கா யாகி நேர்பதி னாறே நிரைபதி னேழென் றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே.' |
என்றார் ஆகலின், |
இந்நூலாற் பயன் யாதோ எனின், யாப்பு ஆராய்தல் பயன். யாப்பு ஆராயவே பாத் தாழிசை துறை விருத்தங்களால் ஆக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அவற்றின் 12 மெய்ம்மை அறிந்து விழுப்பம் எய்தி இம்மை மறுமை வழுவாமை |
யாப்பெனினும், பாட்டெனினும், தூக்கெனினும், தொடர் பெனினும், செய்யுளெனினும் ஒக்கும். என்னை? |
| 'யாப்பும், பாட்டுந் தூக்குந் தொடர்பும் 13 செய்யுளை நோக்கிற் றென்ப நுணங்கி யோரே.' |
என்றார் ஆகலின். |
இந்நூல் 14 உறுப்பிய லோத்துஞ் செய்யுளிய லோத்தும் ஒழிபிய லோத்தும் என மூன்று வகைப்படும். இவ் வோத்தென்ன பெயர்த்தோ எனின், எழுத்தும் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் என்னும் ஆறு உறுப்பினையும் உணர்த்திற்றாதலால் 15உறுப்பிய லோத்து என்னும் பெயர்த்து. |
இவ்வோத்தினுள் 16இத்தலைக் காரிகை என்னுதலிற்றோ வெனின், சிறப்புப் பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று. என்னை? |
|
பல பிரதிகளில் முதலடி இல்லை. சில பிரதிகளில் பின்னிரண்டடிகளே காணப்படுகின்றன. |
|
(பி - ம்.) 12 மேன்மை. 13. செய்யுளென்று செப்பினர்புலவர். 14. உறுப்பியலும் செய்யுளியலும் ஒழிபியலுமென. 15. உறுப்பிய லென்னும். 16. இக். |