உறுப்பியல் 'கந்தமடிவில்' | 3 | | (14) நாலடி நாற்பதும் போல யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் உடைத்தாகச் செய்யப்பட்டமையான் யாப்பருங்கக் காரிகை என்னும் பெயர்த்து. இந்நூல் யாது காரணமாகச் செய்யப்பட்டதோ எனின், பண்டையோர் உரைத்த தண்டமிழ் 3யாப்பிற் (15) கொண்டிலாத குறியினோரைக் குறிக்கொளுவுதல் காரணமாகவும், தொல்லைப் பனுவல் துணிபொருள் உணர்ந்த நல்லவை யோரை (16) நகுவிப்பது காரணமாகவும் செய்யப்பட்டது. இந்நூல் யாவராற் செய்யப்பட்டதோ வெனின், ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகை ஆக்கித் தமிழ்ப்படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமிர்தசாகரர் என்னும் ஆசிரியராற் செய்யப்பட்டது. இந்நூல் எவ்வளவைத்தோ எனின் ஓத்துவகையால் மூன்றும், காரிகை வகையால் நாற்பத்து நான்கும், கிரந்த வகையால் 9தொண்ணூறு கிரந்தமும் இருபத்தெட்டு எழுத்தும் எனக் கொள்க. அவற்றுள் ஒரு கிரந்தமாவது ஒற்றொழித்து உயிரும் உயிர்மெய்யு மாகிய முப்பத்திரண்டு எழுத்தும் எனக் கொள்க. அவற்றுள் நேரசை முதலாகிய காரிகை இருபத்தொன்றும் நிரையசை முதலாகிய காரிகை இருபத்துமூன்றும் எனக்கொள்க. அவற்றுள் நேரசை முதலாகிய காரிகை ஒன்றினுக்கு எழுத்து அறுபத்து நான்கும், நிரையசை முதலாகிய காரிகை ஒன்றினுக்கு எழுத்து அறுபத்தெட்டும் எனக்கொள்க. 10ஆக, இவ்விரு 11 திறமுங் | | படுத்தும் சில நூல்கள் உண்டு. அவற்றைக் காரிகை என்பர். பாணினீயத்தின் வழி நூலாக ஹரிகாரிகா என்ற நூல் ஒன்று உண்டு. அதனை இயற்றியவர் பர்த்ருஹரி. (13) அவிநயர் யாப்பு - ஐந்து இலக்கணங்களையும் சொல்லும் அவிநயம் என்னும் யாப்பதிகாரம்; அவிநயர் என்னும் ஆசிரியர் இயற்றியது. (14) நாலடி நாற்பது - நக்கீரர் இயற்றியதாகச் சொல்வதுண்டு; இந்நூல் நாற்பது வெண்பாக்களால் அமைந்ததுபோலும். (15) கொண்டிலாத குறியினோர் - பொருள் விளக்கம் - பெறாதவர் என்றபடி; வடமொழி நடை. (16) நகுவித்தல் - மகிழ்வித்தல். | | (பி - ம்.) 8. யாப்பைக். 9. தொண்ணூற்றெட்டுக். 10. ஆகவிரு. 11. திறத்தனுங். | |
|
|