பக்கம் எண் :
 
2

யாப்பருங்கலக் காரிகை

 
     4 சந்தோவிசிதியும் போலக் (5) காரிகை யாப்பிற்றாய்க் (6) குண காங்கியம்
என்னும் கருநாடகச் சந்தமேபோல மகடூஉ முன்னிலைத் தாய். அவையடக்கம்
உடைத்தாய். (7) மயேச்சுரர் யாப்பே போல (8) உதாரணம் எடுத்தோதி இசைத்மிழ்ச்
செய்யுட்டுறைக் கோவையே போலவும் (9) அருமறையகத்து அட்டக வோத்தின்
வருக்கக் கோவையே போலவும் (10) 5உருபாவதாரத்திற்கு நீதகச் சுலோகமே போலவும்
முதல் நினைப்பு உணர்த்திய 6 இலக்கியத்ததாய் வேதத்திற்கு (11) நிருத்தமும்
வியாகரணத்திற்குக் (12) காரிகையும், (13) 7 அவிநயர் யாப்பிற்கு
 

     உலகியற் சுலோகங்களின் மிக்குங் குறைந்தும் கிடப்ப இருடிகளாற்
சொல்லப்படுவனவற்றை ஆரிடம் என்று வழங்குவர் எனக் கொள்க.' (யா. வி. சூ. 93,
உரை.)

     (5) காரிகை யாப்பு - இலக்கண விதிகள் சுலோக உருவத்தில் அமைந்தவை.
 
     (6) குணகாங்கியம் - இது கன்னட மொழியில் முன்பு வழங்கிய யாப்பிலக்கண
நூல்போலும். குணகங்கன் என்னும் அரசனுடைய தொடர்புடையதாக இருத்தலும் கூடும்.

     (7) மயேச்சுரர் யாப்பு: மயேச்சுரர் என்னும் ஆசிரியர் இயற்றிய யாப்பிலக்கணம்.
யாப்பருங்கலத்துக்கு முன் இருந்த நூல் என்று தெரிய வருகிறது. யாப்பருங்கல
விருத்திரையுரையில் உரையாசிரியர் அந்நூலிலிருந்து பல சூத்திரங்களை மேற்கோளாகக்
காட்டுகிறார்.

     (8) ஆசிரியர் உதாரணம் எடுத்தோதிய காரிகைகள் : 9, 11 13, 15, 18, 20, 22.

     (9) வேதத்தின் உட்பிரிவாகிய அஷ்டகங்களின் பகுதிகளாகிய வருக்கங்களின்
முதல் நினைப்பைத் தொடர்புபடுத்திச் சொல்லும் கோவை; இதற்கு அநுக்ரமணிகா
என்றும் பெயர் உண்டு. 'அந்த முட்பட விருக்கும விருக்கின் வழியே - யாகி வந்தவவ்
வருக்கமும் வருக்க முழுதும், வந்த வட்டகமு மொட்டரிய சங்கிதைகளும் - வாய்மை
வேதியர்க டாம்விதி யெனும் வகையுமே (கலிங்கத்துப். இராச. 6)

     (10) உருபாவதாரம் - வடமொழி வியாகரண நூல் : இதன் ஆசிரியர் தர்மகீர்த்தி
என்பவர்; காலம் கி. பி. 9 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பர்; பாணினி செய்த
அஷடர த்யாயீ என்ற சூத்திர ரூபமான வியாகரணத்திற்கு அந்நூல் வியாக்கியானம்.
நீதக சுலோகம் - முதல் நினைப்பைச் சேர்த்துச் சொல்லும் சுலோகம்.
 
     (11) நிருத்தம் - வேதங்களுக்குரிய அங்கங்களுள் ஒன்று; வேதத்தில் வரும்
சொற்களுக்குப் பொருள் உரைக்கும் நிகண்டு; யாஸ்கர் இயற்றியது.

     (12) வடமொழியில் இலக்கண நூல்களுக்கு வசனத்தில் பாஷ்யம் உண்டு. அந்தப்
பாஷ்யத்துப் பொருளைச் சுருக்கிச் சுலோக ரூபத்தில் புலப்
 

     (பி - ம்.) 4. சந்தோபிசிதியும். 5. உரூபாவலங்காரத்திற்கு. 6. இலக்கண
விலக்கியத்ததாய். 7. அபிநயனார்.