அடியியைபு இணையியைபு பொழிப்பியைபு ஒரூஉவியைபு கூழையியைபு மேற்கதுவாயியைபு கீழ்க்கதுவாயியைபு முற்றியைபு எனவும், |
அடியெதுகை இணையெதுகை பொழிப்பெதுகை ஒரூஉ வெதுகை கூழையெதுகை மேற்கதுவா யெதுகை கீழ்க்கதுவா யெதுகை முற்றெதுகை எனவும். |
அடிமுரண் இணைமுரண் பொழிப்புமுரண் ஒரூஉமுரண் கூழைமுரண் மேற்கதுவாய் முரண் கீழ்க்கதுவாய்முரண் முற்று முரண் எனவும், |
அடியளபெடை இணையளபெடை பொழிப்பளபெடை ஒரூஉ வளபெடை கூழையளபெடை மேற்கதுலாயளபெடை கீழ்க்கதுவா யளபெடை முற்றளபெடை எனவும். |
அந்தாதித்தொடை இரட்டைத்தொடை செந்தொடையெனவுங் கிடந்த தொடையும் தொடை விகற்பங்களும் ஆமாறு உணர்த்துவான் எடுத்துக்கொண்டார். |
அவற்றுள் இக்காரிகை (1) அடிமோனையும், அடியியைபும், அடியெதுகையும், அடிமுரணும் அடியளபெடையும் ஆமாறு உணர்....று. |
'எழுவாய் எழுத்து ஒன்றின் மோனை' எ - து. அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடிமோனைத் தொடை எனப்படும் எ - று. |
எழுவாய் எனினும் ஆதி எனினும் முத லெனினும் ஒக்கும். |
மோனை எனினும் முதற்றொடை எனினும் ஒக்கும், |
'இறுதி யியைபு' எ - து. அடிதோறும் இறுதிக்கண் 2நின்ற |
|
(1) எல்லாத் தொடை விகற்பங்களிலும் மோனையும் எதுகையுமே பாக்களுக்கும் பாவினங்களுக்கும் இன்றியமையாத சிறப்பினவாக உள்ளன. எதுகை மோனைகளைப்பற்றிய பிற செய்திகள் 41ஆம் காரிகையுட் கூறப்படுகின்றன. முரண் தொடையைப் பற்றிய பிற செய்திகள் 40ஆம் காரிகையுட் கூறப்படுகின்றன. |
|
(பி - ம்.) 2. நின்ற சீரை முதற்சீராகக் கொண்டு அச்சீரின் முடி வெழுத்தானும், அசையானும், சீரானும் சொல்லானும் ஒன்றி. |