(2) எழுத்தானும் சொல்லானும் ஒன்றிவரத் தொடுப்பது அடியியைபுத் தொடை எனப்படும், எ - று. |
'இரண்டாம் வழுவாவெழுத்து ஒன்றின்......எதுகை எ - து. அடிதோறும் முதற்கண் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடியெதுகைத் தொடை எனப்படும் எ-று. |
(3) 'இரண்டாம் எழுத்து ஒன்றின் எதுகை' யென்னாது, 'வழுவா எழுத்து' என்று சிறப்பித்தவதனால், இரண்டாம் எழுத்து ஒன்றி வரினும் முதலெழுத்தெல்லாம் தம்முள் ஒத்த அளவினவாய் வந்து, சுட்டென்பதற்குப் பட்டென்பது அல்லாது பாட்டென்பது எதுகை யாகாது; காட்டென்பதற்குப் பாட்டென்பது அல்லாது பட்டென்பது எதுகையாகாது எனக் கொள்க. |
'மாதே' எ - து மகடூஉ முன்னிலை. |
'மறுதலைத்த மொழியான் வரினும் முரண்' எ - து அடிதோறும் 3மொழிமுதற்கட் (4) சொல்லானும் பொருளானும் மறுதலைப்படத் தொடுப்பது அடிமுரண்டொடை எனப்படும் எ - று. |
'மொழியான் வரினும்' என்ற வும்மையாற் 4பொருளானும் வரும் என்பதாயிற்று. 'அடிதோறும் எ - து. மத்திம தீபமெனக் கொள்க. |
5 'மொழிமுதற்கண் அழியாது அளபெடுத்து ஒன்றுவதாகும் அளபெடையே எ - து அடிதோறும் 6 மொழிமுதற் |
|
(2) எழுத்தான் ஒன்றிவந்ததற்கு உதாரணம். 'மொய்த்துடன் றவழும்' (கா. 20. மேற்.) என்பது. சொல்லான் ஒன்றி வந்ததற்கு உதாரணம், 'இன்னகைத் துவர்வாய்' (கா. 18. மேற்) என்பது. (3) 'இரண்டாம் வழுவா வெழுத்து' என்று சிறப்பித்தவதனால், அடிக்கு எழுத்து எண்ணுங்கால் மெய்களை விட்டொழித்து எண்ணுவது போலன்றித் தொடைக்கு அவையும் கூட்டிக் கொள்ளப்படும் என்றவாறு. (4) சொல் முரணுக்கு உதாரணம் 'சீறடிப் பேரல்குல்' சுருங்கிய நுசுப்பு பெருகுவடம்' 'குவிந்து விரிந்து' போன்ற தொடர்கள். பொருள் முரணுக்கு உதாரணம், 'இருள்பரந்தன்ன' என்ற செய்யுளின் (கா. 18 மேற்) முதல் நான்கு அடிகள். |
|
(பி - ம்.) 3. முதன்மொழிக்கட், 4. பொருளான் வரினுமென்ப. 5. முதன்மொழிக்கண், 6. முதன்மொழிக்கண். |