ஆசிரியப்பா |
| (9) 'பொன்னி னன்ன பொறிசுணங் கேந்திப் (இணையெதுகை) பன்னருங் கோங்கி னன்னலங் கவற்றி (பொழிப்பு) 3 மின்னிவ ரொளிவடந் தாங்கி மன்னிய (ஒரூஉ) நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி (கூழை) என்னையு மிடுக்கண் டுன்னுவித் தின்னடை (மேற்கது) அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் (கீழ்க்கது) கன்னியம் புன்னை யின்னிழற் றுன்னிய (முற்று) 4 மயிலேர் சாயல் வாணுதல் அயில்வே லுண்கணெம் மறிவுதொலைத் தனவே' |
இதனுள் இணையெதுகை முதலாகிய ஏழு விகற்பமும் முறை யானே வந்தவாறு கண்டுகொள்க. |
'இனி முரணிற்கு ஆன விகற்பமுஞ் சீறடிப் பேரது' எ - து : |
ஆசிரியப்பா |
| (4) 'சீறடிப் பேரக லல்கு லொல்குபு (இணைமுரண்) சுருங்கிய நுசுப்பிற் பெருகுவடந் தாங்கிக் (பொழிப்பு) குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து (ஒரூஉ) சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன் (கூழை). வெள்வளைத் தோளுஞ் சேயரிக் கருங்கணும் (மேற்கது) இருக்கையு நிலையு மேந்தெழி லியக்கமுந் (கீழ்க்கது) துவர்வாய்த் தீஞ்சொலு முவந்தெனை 5முனியாது (முற்று) என்று மின்னண மாகுமதி பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லோயே.' |
இதனுள் இணைமுரண் முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. |
'அளபெடையின் தானவிகற்பமும் தாஅட்டாஅமரை' எ-து: |
|
(3) வடம் - ஆரம். 1-4: ஏந்தி, கவற்றி, தாங்கி மன்னிய முலை. துன்னு வித்து பொருந்தச்செய்து. முலையால் வருந்தி. துன்னுவித்துத் துன்னிய வாணுதலின்கண்கள் எம் அறிவைத் தொலைத்தன. (4) இஃது ஓம்படை; தோழியின் கூற்று. |
|
(பி - ம்.) 3. மின்னவி. 4. மயிலே சாயல். 5. முனியாயென்று. |