பக்கம் எண் :
 
60

யாப்பருங்கலக் காரிகை

 

ஆசிரியப்பா

  (5) 'தாஅட் டாஅ மரைமல ருழக்கிப் (இணையளபெடை)
பூஉக் குவளைப் போஒ தருந்திக் (பொழிப்பு)
காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் (ஒரூஉ)
மாஅத் தாஅண் மோஒட் டெருமை (கூழை)
தேஎம் புனலிடைச் சோஒர் பாஅன் (மேற்கது)
மீஇ னாஅர்ந் துகளுஞ் சீஇர் (கீழ்க்கது)
எஎ 6ராஅர் நீஇ ணீஇர் (முற்று)
ஊரன் செய்த கேண்மை
ஆய்வளைத் தோளிக் கலரா 7னாதே.'
 
      இதனுள் இணையளபெடை முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு
கண்டுகொள்க.
 
     ['தான விகற்பமும்' என்று சிறப்பித்தவதனால் (6) இரண்டள பெடையும்
வரப்பெறும்; வரிற் றம்முண் மயங்காதே வர வொன்றும்.]
 

(20)

     'தாழ் குழலே' எ - து. மகடூஉ முன்னிலை.
 

1.உறுப்பியல் முற்றும்
 

----


     (5) 1-8 எருமை உழக்கி, அருந்தி, கறித்துப் போய், சோர் பாலை மீன் ஆர்ந்து
உகளும் நீர் ஊரன். அலர் - பழிச்சொல்.

     (6) இரண்டளபெடையும் ; உயிரளபெடை, ஒற்றளபெடைகள். இவை இரண்டும்
இணைமோனை முதலியவற்றில் ஒன்றுடன் ஒன்று கலவாது என்றபடி.
 

     (பி - ம்.) 6. னாஅ. 7. னாவே.