பக்கம் எண் :
 

உறுப்பியல் 'கந்தமுந் தேனார்'

61

 

உறுப்பியல் (1) முதனினைப்புக் காரிகை

கந்தமுந் தேனார் சுருக்கமுங் காதற் குறில் குறிலே
தந்தன வீரசை தேமாவுந் தண்குன்றத் தன்றிருவுங்
கொந்தவிழ் கோதாய் குறடிரை வெள்ளை யறவெழுவாய்
அந்தமு மாவு மிருசீரு மோனையு மாமுறுப்பே.
 

     (1) இஃது உறுப்பியலில் ஆசிரியர் கூறிய காரிகைகளின் முதனினைப்புக் காரிகை.
இஃது அடிவரவென்றும் வழங்கப்படும். இதனை இயற்றியவர் எவர் என்பது
விளங்கவில்லை, முதனினைப்பை உணர்த்தும் செய்யுள் பிரதிதோறும்
வேறுபட்டிருக்கிறது. அவ்வேறுபாடு வருமாறு :
 

கலித்துறை

'கந்தமுந் தேனார் சுருக்கங் குறினெடி லாங்குறிலே
தந்தன வீரசை தேமாந்தண் குன்றந்தண் சீரதிரும்
அந்தண் குறடிரை வெள்ளைக் கறத்தெழு வாயொடந்த
முந்திய மாவிரு மோனை யிருப துறுப்பியலே.'
 

அடிவர வாசிரியம்

  'கந்தந் தேனார் சுருக்கங் குறினெடில்
குறிலே யீரசை தேமாந் தண்ணிழல்
குன்றந் தண்சீர் திருமழை குறளிரு
திரைத்த வெள்ளை யறத்தா றெழுவாய்
அந்த மாவு மிருசீர் மோனை
என்றிவை 1யிருபது முறுப்பிய லாகும்.'
 

----


     (பி - ம்.) 1. நாலைந் துறுப்பிய லோத்தே.