2. செய்யுளியல் | பாவுக்குரிய அடியும் ஓசையும் | | 21. வெண்பா வகவல் கலிப்பா வளவடி வஞ்சியென்னும் ஒண்பா வடிகுறள் சிந்தென் 1 றுரைப்ப வொலிமுறையே திண்பா மலிசெப்பல் சீர்சா லகவல்சென் றோங்குதுள்ளல் நண்பா வளமந்த நலமிக தூங்க னறுநுதலே. | இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் - வெண்பா, வெள்ளொத்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் ; ஆசிரியப்பா, ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் ; கலிப்பா, கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம்; வஞ்சிப்பா, வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம்; மருட்பா எனக் கிடந்த செய்யுட்களாமாறு உணர்த்துதலாற் செய்யுளிய லோத்து என்னும் பெயர்த்து. | இவ்வோத்தினுள் இத்தலைக் காரிகை என்னுதலிற்றோ எனின் - வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி என்னும் நான்கு பாவிற்கும் அடியும் ஓசையு மாமாறு உணர்த்....று. | 'வெண்பா அகவல் கலிப்பா அளவடி' எ - து. வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் 2நாற்சீரடியான் வரும் எ - று. | 'வஞ்சி என்னும் ஒண்பா அடி குறள் சிந்து என்று உரைப்ப' எ - து. வஞ்சிப்பா இருசீரடியானும், முச்சீரடியானும் வரும் என்று சொல்லுவர் புலவர் எ - று. | 'வஞ்சி என்னும் ஒண்பா' என்று சிறப்பித்தவதனால் வெண்பாவின் ஈற்றடியும் நேரசை யாசிரிய்பாவின் ஈற்றயலடியும், கலி வெண்பாவின் ஈற்றடியும் முச்சீரடியான் வரும்; இணைக்குற ளாசிரியப்பாவின் இடையடி இரண்டும் பலவும் குறளடியானும் சிந்தடியானும் வரும்; கலியினுள்ளும் ஒருசார் அம்போதரங்க வுறுப்பும் இருசீரடியானும் முச்சீரடியானும் வரப்பெறும்; அராகவுறுப்பு 3நாற்சீரின் மிக்கு வருவனவும் உள எனக் கொள்க: |
| (பி - ம்.) 1. றுரைப்பரொலி, 2. நாற்சீரோரடியான், 3. அளவடி முதலாக எல்லா வடியானும் வரப்பெறும். | |
|
|