இவை போக்கித் தத்தம் (1) இலக்கணச் சூத்திரத்துள்ளே காட்டுதும். |
| ['கலியொடு வெண்பா வகவல் கூறின் அளவடி யதனா னடக்குமன் னவையே' 'சிந்தடி குறளடி யென்றிரண் டடியான் வஞ்சி நடக்கும் 4வழக்கின வாகும்' |
என்பது யாப் பருங்கலம் (சூ 27 28.)] |
'ஒலிமுறையே' எ - து. ஓசை முன்பு சொன்ன அடைவே எ - று. |
'திண்பாமலி செப்பல் சீர்சால் அகவல் சென்றோங்கு துள்ளல் நண்பா அமைந்த நலமிகு தூங்கல்' எ - து. வெண்பா செப்ப லோசையான் வரும்;கலிப்பா துள்ளலோசையான் வரும்; வஞ்சிப்பா தூங்கலோசையான் வரும் எ - று. |
'நறுநுதலே' எ - து மகடூஉ முன்னிலை. |
'திண்பாமலி செப்பல்' என்று சிறப்பித்தவதனாற் செப்பலோசை மூன்று வகைப்படும். ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும் ஒழுகிசைச் செப்பலும் என, என்னை? |
| (2) 'வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை ஏந்திசைச் செப்ப லென்மனார் புலவர்.' 'இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத் 5 தூங்கிசைச் செப்ப லென்மனார் புலவர்.' 'வெண்சீர் ரொன்றலு மியற்சீர் விகற்பமும் ஒன்றிய யாப்பே யொழுகிசைச் செப்பல்.' |
[இவற்றுக்குச் செய்யுள் : |
| யாநானு நாடாமா' லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு.' |
(குறள். 397.) |
|
(1) இலக்கணச் சூத்திரம் என்றது காரிகைகளை. (2) இவை மூன்றும் சங்கயாப்பு என்பது யாப்பருங்கல விருத்தியிற் கண்டது. |
|
(பி - ம்.) 4. வழக்கினையுடைய, வழக்கினதென்ப. 5. மயக்கமில் புலவர் தூங்கிசையென்ப, மயக்கமி றூங்க லெனவகுத் தனரே |