இது வெண்சீர் வெண்டளையான் வந்தமையால் ஏந்திசைச் செப்பலோசை. |
| 'பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்.' |
(குறள். 1121.) |
இஃது இயற்சீர் வெண்டளையான் வந்தமையால் ஒழுகிசைச் செப்பலோசை. |
| 'கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா வுயிருந் தொழும்.' |
(குறள், 290) |
இஃது இரண்டு தளையும் விரவி வந்தமையால் ஒழுகிசைச் செப்பலோசை. |
'சீர்சா லகவல்' என்று சிறப்பித்தவதனால் அகவலோசை மூன்று வகைப்படும். ஏந்திசை யகவலும் தூங்கிசை யகவலும் ஒழுகிசை யகவலுமென. என்னை? |
| 'நேர்நே ரியற்றளை யான்வரு மகவலும் நிரைநிரை யியற்றளை யான்வரு மகவலும் ஆயிரு தளையுமொத் தாகிய வகவலும் ஏந்த றூங்க லொழுக லென்றிவை ஆய்ந்த நிரனிறை யாகு மென்ப' |
இவற்றுக்குச் செய்யுள் : |
| 'போது சாந்தம்.....................துன்னுவாரே,' |
(கா. 5, மேற்) |
இது நேரொன்றாசிரியத் தளையான் வந்தமையால் ஏந்திசை யகவலோசை. |
| 'அணிநிழ....................பரிசறுப்பவரே' |
(கா. 5. மேற்) |
இது நிரையொன் றாசிரியத் தளையான் வந்தமையால் தூங்கிசை யகவலோசை. |
| 'குன்றக் குறவன்...........சுணங்கே.' |
(கா. 9. மேற்) |
இஃது இரண்டு தளையும் விரவி வந்தமையால் ஒழுகிசை யகவலோசை |
'சென்றோங்கு துள்ளல்' என்று சிறப்பித்த வதனாற் றுள்ள லோசை மூன்று வகைப்படும். ஏந்திசைத் துள்ளலும் அகவற் றுள்ளலும் பிரிந்திசைத் துள்ளலும் என. என்னை? |