பக்கம் எண் :
 

செய்யுளியல் 'வெண்பா வகவல்'

65

 
'ஏந்திசைத் துள்ளல் கலித்தளை யியையின்,'

'வெண்டளை தன்றளை 5யென்றிவை யியையின்
ஒன்றிய வகவற் றுள்ளலென் றோதுப.'

'தன்றளை பிறதளை யென்றிவை யனைத்தும்
7 பொருந்தி வரினே பிரிந்திசைத் துள்ளல்.'
 
     [இவற்றுக்குச் செய்யுள் :
 

தரவு கொச்சகக் கலிப்பா

  '(3) முருகவிழ்தா மரைமலர்மேன் முடியிமையோர் புடைவரவே
வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மன முடையார்
இருவினைபோய் விழமுனியா வெதிரியகா தியை8யரியா
நிருமலரா 9யறிவினராய் நிலவுவர்சோ தியினிடையே.'
 
     இது கலித் தளையான் வந்தமையால் ஏந்திசைத்துள்ள லோசை
 

 
'செல்வப்போர்க்...........தொளித்ததே.

(கா. 11. மேற்.)

     இது வெண்சீர் வெண்டளையும் கலித்தளையும் விரவி வந்தமை யால்
அகவற்றுள்ளலோசை.
 

வஞ்சிப்பா

  (4) 'குடநிலைத் தண்புறவிற் கோவல ரெடுத்தார்ப்பத்
தடநிலைய பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் 10தேறப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப,
எனவாங்கு,
 

     3. சினனார் - அருகபரன், காதி - முத்திக்குப் பாதகமாக உள்ள கர்மங்கள்;
அவை ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், போகநீயம், அந்தராயம் என்பன.
மனமுடையார் சோதி யி னிடையே நிலவுவர்.

      4. குடம் - கண்ணனாடிய குடக்கூத்து; தயிர்த்தாழியுமாம். புறவு - முல்லை
நிலம். மரம் - உழலைமரம், சீவக. 422, 713, 1226. காளைகளுக்கு மணிகட்டுதல் மரபு.
ஆன் - பசு, ஏறு ஆர்ப்ப, பாய்ந்து, ஒரீஇ, ஏறப்போய், புல்லி முனையும் கான். இது
தோழி தலைவியை ஆற்றுவித்தது.
 

     (பி - ம்.) 6. யென்றிரண்டியையின். 7. பிரிந்து. 8. யெறியா. 9. யருவினராய்.
10. தொன்றப்