| ஆனொடு புல்லிப் பெரும்புதன் முனையுங் கானுடைத் தவர்தேர் சென்ற வாறே.' |
இது பலதளையும் விரவி வந்தமையால் பிரிந்திசைத் துள்ள லோசை.] |
'நண்பா வமைந்த நலமிகு தூங்கல்' என்று சிறப்பித்த வதனாற் றூங்கலோசை மூன்று வகைப்படும். ஏந்திசைத் தூங்கலும் அகவற்றூங்கலும் பிரிந்திசைத் தூங்கலும் என. என்னை? |
| ஒன்றிய வஞ்சித் தளையே வரினும் ஒன்றா வஞ்சித் தளையே வரினும் '1 ஆயிரு தளையும் பிறவு மயங்கினும் ஏந்த லகவல் 12 பிரிந்திசைத் தூங்கலென் றாய்ந்த நிரனிறை யாகு மென்ப,' |
[இவற்றுக்குச் செய்யுள் : |
வஞ்சிப்பா |
| '(5) வினைத்திண்பகை விழச்செற்றவன் வனப்பங்கய மலர்த்தாளிணை நினைத்தன்பொடு தொழுதேத்துநர் நாளும் மயலார் நாற்கதி மருவார் பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே' |
இஃது ஒன்றிய வஞ்சித்தளையான் வந்தமையால் ஏந்திசைத் தூங்கலோசை. |
வஞ்சிப்பா |
| (6) 'வானோர்தொழ வண்டாமரைத் தேனார்மலர் மேல்வந்தருள் ஆனாவருள் கூரறிவனைக் கானார் |
|
5 வனம் - நீர்; அழகுமாம். நாற்கதி: மக்கள், தேவர், நரகர், விலங்கு என்ற பிறவிகள். 6. அருள்கூர் அறிவன் - அருகபரன், கான் ஆர் - மணம் மிகுந்த. |
|
(பி - ம்.) 11. என்றிவையிரண்டும். 12. பிரிதலென்றிவை, யாய்ந்த |