| (5) 'தொன்னலகத்தின் புலம்பலைப்பத் தொடித்தோண்மேல் பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி இன்னலத்தகை யிதுவென்ன வெழில்காட்டிச் சொன்னலத்தகைப் பொருள்கருத்தி னிற்சிறந்தாங்கெனப்பெரிதும் கலங்கஞ ரெய்தி விடுப்பவுஞ் சிலம்பிடைச் செலவுஞ் 6சேணிவந் தற்றே.' | இது முச்சீரடியானும் தூங்கலோசையானும் வந்தமையால் 7சிந்தடி வஞ்சிப்பா. | 'உதாரணமே' எ - து. இறுதி விளக்காகக் கொள்க. | (2) |
| (5) புலம்பு - தனிமை. பரிவு - துன்பம். அஞர் - துன்பம். பொருள் வயிற் பிரிந்து போகும் தலைவனுக்குத் தோழி சொல்லியது இது. |
| (பி - ம்.) 6. சேணிகந். 7. வஞ்சிப்பா. | - - - | குறள்வெண்பா, நேரிசைவெண்பா | | 23. ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட் சீரிய வான்றனிச் சொல்லடி மூஉய்ச்செப்ப லோசைகுன்றா தோரிரண் டாயு மொருவிகற் பாயும் வருவதுண்டேல் நேரிசை யாகு நெரிசுரி பூங்குழ னேரிழையே. | இ - கை. குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, 1நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனவும் ; நேரிசை யாசிரியப்பா, இணைக்குற ளாசிரியப்பா, நிலைமண்டில வாசிரியப்பா, அடிமறிமண்டில வாசிரியப்பா எனவும் ; நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா, அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா, வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைச் கொச்சகக் கலிப்பா எனவும் ; குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா, எனவும் ; புறநிலை வாழ்த்து மருட்பா, கைக்கிளை மருட்பா, வாயுறை வாழ்த்து மருட்பா, செவியறிவுறூஉ மருட்பா எனவுங் கிடந்த பாவிகற் |
| (பி - ம்.) 1. சிந்தியல்வெண்பா வெனவும். | |
|
|