பக்கம் எண் :
 

செய்யுளியல் 'வளம்பட வென்பது'

69

 
அன்புகொண் மடப்பெடை யசைஇய வருத்தத்தை
மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே.

(iii) கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால்
துன்னரூஉந் தகையவே காடென்றா ரக்காட்டுள்
இன்னிழ லின்மையால் வருந்திய மடப்பிணைக்குத்
தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே.
 
     இவை மூன்றுந் தாழிசை.

எனவாங்கு,

     இது தனிச்சொல்
 
  'இனைநல முடைய கானஞ் சென்றோர்
புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற்
பல்லியும் பாங்கொத் திசைத்தன
நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே.'
 

(கலி. 11)

     இது சுரிதகம்.
 
     இஃது அளவடியானும் துள்ளலோசையானும் வந்தமையால் கலிப்பா.
 
     'கண்ணார் கொடிபோல் துளங்கிடை மாதே' எ - து. மகடூஉ முன்னிலை.
 
     'சுறமறி தொன்னலத்தின் புலம்பென்று உளங்கொடு நாவலர் ஓதினர்
வஞ்சிக்குதாரணம்' எ - து :
 
  (4) 'சுறமறிவன துறையெல்லாம்
இறவீன்பன வில்லெல்லாம்
மீன்றிரிவன கிடங்கெல்லாம்
தேன்றாழ்வன பொழிலெல்லாம் என வாங்குத்
தண்பணை தழீஇய விருக்கை
மண்கெழு நெடுமதின் மன்ன னூரே.'
 
     இஃது இருசீரடியானும் தூங்கலோசையானும் வந்தமையால் 3குறளடி வஞ்சிப்பா.
 

     (4) சுற - சுறாமீன். மறிவன - துள்ளுவன. இறவு - இறாமீன். கிடங்கு - அகழி.
பணை - வயல்.
 

     (பி - ம்.) 4. இனநல. 5. வஞ்சிப்பா.