பக்கம் எண் :
 
     
68

யாப்பருங்கலக் காரிகை

 
     அகவற்கு உதாரணம் செங்களம் படக்கொன்று' எ - து :
 
(2) 'செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட் டியானைக்
3கழறொடிச் சேஎய் குன்றங்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.'
 

(குறுந். 1.)

     இஃது அளவடியானும் அகவலோசையானும் வந்தமையான் ஆசிரியப்பா.
 

     'கலிக்கு அரிதாய' எ - து :
 

  (3) 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்
வருவர்கொல் வயங்கிழாய் வலிப்பல்யான் கேளினி'
 
     இது தரவு.
 
(i) அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற்
கடியவே கனங்குழாய் காடென்றா ரக்காட்டுள்
துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே.

(ii) இன்பத்தி னிகந்தொரீஇ யிலைதீய்ந்த வுலவையால்
துன்புறூஉந் தகையவே காடென்றா ரக்காட்டுள்
 

     (2) கோல் - திரண்ட. கழல் தொடி - கழலவிட்ட வீரவளை - சேஎப் - முருகன்.
அம்பையும் யானையையும் வளையையுமுடைய சேய். குருதிப்பூ - செந் நிறமலர். குலை
- பூங்கொத்து காந்தட்டு - காந்தளையுடையது. தோழி கையுறை மறுத்தது இது.

      (3) அருளியோர்க்கு. தம்மை அருளவந்த அந்தணர் தாபதர் முதலியவர்களுக்கு.
தெறுதல் - அழித்தல். புரிவு அமர் - மனம் பொருந்துதல் அமைந்த பொருள்
அளித்தலும் தெறுதலும் புணர்ச்சியும் தரும் என. வலிப்பல் - துணிவேன். (i)
துடிஅடிக்கயந்தலை - துடிபோலும் அடியையுடைய யானைக்கன்றுகள் (ii) உலவை -
காய்ந்த மரக்கொம்புகள். (iii) கல் - மலை. வேய் - மூங்கில். கனைகதிர் - செறிந்த
சூரிய கிரணங்கள். இனைநலம் - தலைவன் தலைவியை எண்ணி வருந்துவதற்குக்
காரணமான நலங்கள்; இனைதல் - வருந்துதல் மகளிர்க்கு இடக்கண் துடித்தல்
நன்னிமித்தம்.
 

     (பி - ம்.) 3. கழறொடீஇச்.