பக்கம் எண் :
 
     
86

யாப்பருங்கலக் காரிகை

 
துரைக்கப் பட்டது. சீர் வரையறுத்திலாமையால் எனைத்துச் சீரானும் வரப்பெறும் எனக்
கொள்க. (3)

வரலாறு

  'நீல மாகட னீடு வார்திரை
நின்ற போற்பொங்கிப் பொன்று 3மாங்கவை
காலம்பல காலஞ் சென்றுபின்
செல்வர் யாக்கை கழிதலுமே.'

'நண்ணு வார்வினை நைய நாடொறும்
நற்ற வர்க்கர சாய ஞானநற்
கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே.'
 
     இவை நாற்சீரின் மிக்க பலசீரான் வந்த அடி யிரண்டாய் ஈற்றடி குறைந்து வந்த
குறட்டாழிசை.
  'பிண்டியி னீழற் பெருமான் பிடர்த்தலை
மண்டலந் தோன்றுமால் வாழி யன்னாய்.'

'(4) அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி
மறுவறு பத்தினி போல்வையி னீரே.'
 

     இவை விழுமிய பொருளும் ஒழுகிய வோசையு மின்றி இரண்டடியும்
அளவொத்துச் செந்துறை வெள்ளையிற் சிதைந்து வந்தமையின் செந்துறைச் சிதைவுத்
தாழிசைக் குறள்.
 

'வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டைய ளல்லள் படி.'
 

     இது குறள் வெண்பாவிற் சிறிது செப்பலோசை சிதைந்து வந்த சந்த மழிந்த
குறட்டாழிசை.
 
     (3) இதன்பின் சில பிரதிகளில், 'என்னை? ''ஈரடியாகிச் சீர்பல மிடைந்தே, அந்தடி
குறைந்து வந்தினி தொழுகும், திறப்பா டுடைய குறட்டா ழிசையே'' என்றார் ஆகலின்'
என்ற பகுதி காணப்படுகிறது.

      (4) கவுந்தி - குந்திதேச மன்னன்மகள்; பாண்டவரின் தாய். அறுவர்க்கு -
சூரியன் முதலிய ஆறு பேருக்கு, அறுவரை - கன்னன் தருமன் முதலிய ஆறு பேரை.
 

     (பி - ம்.) 3. மாங்கடை.