| '(5) அந்தடி குறைநவுஞ் செந்துறைச் சிதைவும் சந்தழி குறளுந் தாழிசைக் குறளே' 'உரைத்தன விரண்டுங் குறட்பாவினமே' |
என்பன யாப்பருங்கலம் (சூ. 64. 65) |
(6) |
|
(5) அத்தடி - ஈற்றடி. சந்து அழி - சந்தம் சிதைந்த. |
- - - - |
வெண்டாழிசை. வெண்டுறை, வெளிவிருத்தம் |
| 27. மூன்றடி யானு முடிந்தடி தோறு முடிவிடத்துத் தான்றனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்வெண்டாழிசையே மூன்றடி யாய்வெள்ளை போன்றிறு மூன்றிழி பேழுயர்பா ஆன்றடி தாஞ்சில வந்தங் 1குறைந்திறும் வெண்டுறையே. |
இ.....கை, வெளிவிருத்தமும் வெண்டாழிசையும் வெண்டுறையும் ஆமாறு உணர்த்......று. |
'மூன்றடியானும் முடிந்து அடிதோறும் முடிவிடத்துத் தான் தனிச் சொற்பெறுந் தண்டா விருத்தம்' எ - து. மூன்றடியானும் முற்றுப் பெற்று அடிதோறும் இறுதிக்கண் ஒரு சொல்லே வருவது வெளிவிருத்தம் எனப்படும் எ - று. |
'மூன்றடியானும்' என்ற உம்மையால் நான்கடியானும் வரப் பெறும் எனக் கொள்க. என்னை? |
| 'ஒருமூன் றொருநான் கடியடி தோறுந் தனிச்சொற் றழுவி நடப்பன வெள்ளை விருத்த மெனப்பெயர் வேண்டப் படுமே' |
என்றார் காக்கைபாடினியார். |
['தண்டா விருத்தம்' என்று சிறப்பித்தவதனால் நாற்சீரடியுட் பட்டு அடங்காதே வேறாய் வருவது ஈண்டுத் தனிச் சொல் ஆவதெனக் கொள்க.] |
|
(பி - ம்.) 1. குறைந்திடும். |