பக்கம் எண் :
 
பொருளணியியல்119

வள்ளல்மேற் செல்லுங்கால் : தண்ணளி - குளிர்ந்த குணம் மருவுதல் - பொருந்தல் . எண்ணல் - ஆசைப்படல் எனவும் ; மேகத்தின் , மேற் செல்லுங்கால் : தண்ணளி - குளிர்ந்த கொடை , இன்சொல் - புகழ் எனவும் வரும்.

வி-ரை: அடை விரவிப் பொருள் வேறுபட மொழிதல் : - கவிஞன் தான் சொல்லக் கருதிய பொருள், அதனை மறைத்து அதற்கு ஒத்ததாகக் கூறும் பொருள் ஆகிய இரண்டற்கும் சில அடைமொழிகளைப் பொதுவாகக் கூறியும்,சில அடைமொழிகளை ஒன்றற்கே சிறப்பாகக் கூறியும். தான் கருதிய பொருள்களுக்கு வேறான பொருளைக் கூறுதல் இதன் இலக்கணமாகும். அடை விரவுதல் பொதுவும் சிறப்புமாகிய அடைமொழிகள் விரவுதல்.

இப்பாடற்கண் கவிஞன் சொல்லக் கருதிய பொருள் ஒரு வள்ளல் ஆகும்; அதனைப் புலப்படுத்த அதற்கு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருள் முகில் ஆகும். தண்ணளி சேர்தலும், இன்சொல் மருவுதலும் வள்ளலுக்கும் முகிலுக்கும் பொதுவான அடைமொழிகளாகும், எண்ணிய எப்பொருளும் எந்நாளும் மண்ணுலகில் நமக்கு அளிக்கும்' என்னும் அடைமொழி வள்ளலுக்கே உரிய சிறப்பு அடைமொழியாகும். இங்ஙனம் இவ்விரு அடைமொழிகளும் விரவி வள்ளலுக்கு மாறாக முகிலாகிய பொருளைச் சொல்லியிருப்பதால், இது அடை விரவிப் பொருள் வேறுபட மொழிதல் ஆயிற்று.

3. அடையை விபரீதப்படுத்துப் பொருள் வேறுபட மொழிதல்

எ-டு: 'கடைகொல் உலகியற்கை! காலத்தின் தீங்கால்
அடைய வறிதாயிற் றன்றே - அடைவோர்க்(கு)
அருமை யுடைத்தன்றி யந்தேன் சுவைத்தாய்க்
கருமை விரவாக் கடல்.

இ-ள்: மிகவுத் தாழ்வுடைத்துப் போலும் உயர்ந்தோர் செய்தி! காலவியற்கையாலே மிடியாய் சென்று இரப்பவும் வறுமையுற்றது; சேர்வோர்க்கு அருமையின்றித் தேன்போலுங் கிளவியும் உடைத்தாய் வெகுளி யில்லாக் கடல் எ-று.

கடல்-வள்ளல். சேர்வோர்க்கும் அருமையும், இனிமையில்லாமையும், கருமையும் கடற்கு உண்டென்க.

இது வறுமையுற்றான் ஒரு வள்ளலைக் கொள்ள நின்றது.

'வகையின்' என்றதனால், பிறவகையான் வருவனவும், பிற அலங்காரங்களோடு கூடி வருவனவும் கொள்க. அல்லதூஉம், இவை யெல்லாம் கருதிய பொருள் நோக்கி உணரவைக்கப்படும் என்க.

வி-ரை:அடையை விபரீதப் படுத்துப் பொருள் வேறுபட மொழிதல்:- கவிஞன் தான் சொல்லக்கருதிய பொருளை மறைத்து, அதற்கு ஒத்ததாகக் கூறப்படும் பொருளில் அதற்கு ஒவ்வாத விபரீதமான அடைமொழிகளைப் புணர்த்துக் கூறுதல் இதன் இலக்கணமாகும்.

இப்பாடற்கண் கவிஞன் சொல்லக் கருதிய பொருள் வள்ளலாகும். அதற்கு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருள் கடலாகும். அடைவோர்க்கு அருமையின்றி யிருத்தல், அம்தேன் சுவைத்தாதல், கருமை விரவாதிருத்தல்