பக்கம் எண் :
 
பொருளணியியல்137

வெறுக்கத்தக்க ஆசைப்பாடு உடையனல்லன் ஆதலானும், இகழ்தற்கு ஏதுவாயினான் எ- று.

அன்பன், இரவாளன், வேட்கையிலன் எனக் கூட்டுக. அக்காலத்து அறிவு அழிந்தமையாற் புகழாயிற்று.

வி-ரை: இப்பாடற்கண் தலைவி, புணருங்காலத்துத் தன் தலைவன் தன் மென்மை கெடக் கூடுகின்றான் எனப் பழிப்பது போலக் கூறி, அக் காலத்து அங்ஙனம் கூடுவதே இயல்பாதல் தோன்றப் புகழ்ந்து கூறுலின் இது பழிப்பது போலப் புகழ்தலாயிற்று. (39)

16. நிரல் நிறையணி

66. நிரல்நிறுத் தியற்றுதல் நிரல்நிறை யணியே.

எ-ன், நிறுத்த முறையானே நிரல்நிறை என்னும் அலங்காரம் உணர்த்துதல் நுதலிற்று.

இ- ள் : சொல்லையும் பொருளையும் நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்வது, நிரல்நிறை என்னும் அலங்காரமாம் எ- று.

' நிரல் நிறுத்துதல் ' என்னாது 'இயற்றுதல் ' என்றமையின், மொழிமாற்றிப் பொருள் கொள்வதூஉங் கொள்க.

அவற்றுள்,

1. நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்வது

எ- டு: 'காரிகை மென்மொழியால் நோக்கால் கதிர்முலையால்
வார்புருவத் தால்இடையால் 1வாய்த்தளிரால் - நேர்தொலைந்த
கொல்லி வடிநெடுவேற் கோங்கரும்பு விற்கரும்பு
வல்லி2கவிர்மென் மலர் '

நேர் - முறை. தொலைதல் - கெடுதல். கொல்லி - ஓர்பண் 'தொலைந்தது ' என்பது 'தொலைந்த ' என ஈறு கெட்டது.

வி-ரை:, (இ-ள்) அழகு பொருந்திய பெண்ணின் மென்மையான சொல்லாலும், நோக்காலும், ஒளி பொருந்திய கொங்கைகளாலும், நீண்ட புருவத்தாலும், இடையாலும், தளிரனைய கையாலும், கொல்லி என்னும் இனிய பண்ணும், கூர்மை பொருந்திய நீண்ட வேலும், கோங்கினது அரும்பும், மன்மதனின் வில்லாகிய கரும்பும், பூங்கொடியும், மென்மையான முருக்க மலரும் அழகு இழந்தன என்பதாம்.

இதன்கண் சொல்லால் பண்ணும், நோக்கால் வேலும், கொங்கையால் கோங்கரும்பும், புருவத்தால் கரும்பும், இடையால் வல்லியும், வாயால் முருக்க மலரும் நேர் தொலைந்த என நிரல்நிறையாக்கிப் பொருள்கோடலின், இது நிரல்நிறையாயிற்று.

2. நிரலே நிறுத்தி மொழிமாற்றிப் பொருள்கொள்வது

எ- டு: ' ஆடவர்கள் எவ்வா(று) அகன்றொழிவார் வெஃகாவும்
பாடகமும் ஊரகமும் பஞ்சரமா - நீடியமால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
மன்றார் மதிற்கச்சி மாண்பு'


1. 'வையகத்து ' என்பதும்

2. 'தனியேன் மனத்து ' என்பதும் பாடங்களாகும்.