பக்கம் எண் :
 
154தண்டியலங்காரம்

விச்சாதரன் என்பது-விஞ்சையராகிய தேவசாதிக்கும், வித்தையையுடைய சோழனுக்கும் பெயர். அந்தரம் என்பது ஆகாயத்திற்கும், கேட்டிற்கும் பெயர். அச்சுதன் என்பது- திருமாலுக்கும், கேடில்லானுக்கும் பெயர். நிறைவான் கலையான் என்பது கலையையுடைய சந்திரனுக்கும், கல்வியால் நிறைந்த சோழனுக்கும் பெயர். களங்கம் என்பது- மாசுக்கும், பாவத்துக்கும் பெயர். நீதி இறையான் என்பது முக்கட் கடவுளுக்கும் நீதி நெறி அரசனான சோழனுக்கும் பெயர். அநகன் என்பது- மலை இல்லாதோனுக்கும், பாவம் இல்லாதோனுக்கும் பெயர். இதனை நகன், அநகன் எனப் பிரித்துக் கொள்க.

வி-ரை: எடுத்துக் கூறப்படும் இருபொருள்களில் ஒன்றற்கு விரோதமானவற்றை பின்னே அமைத்துக் கூறுவது விரோதச் சிலேடை ஆகும்.

இப்பாடற்கண் அடிதோறும் இவ்வணி அமைந்துள்ளது.(1)' விச்சாதரன்' என்னும் சொல் விஞ்சையனுக்கும், சோழனுக்கும் பொருந்துவதால் சிலேடையாம். அது விஞ்சையன் என்னும் பொருள்படுங்கால் அந்தரத்து மேவான்(ஆகாயத்தில் பொருந்தமாட்டான்) என்பது விரோதமாய் இருத்தலின் விரோதச் சிலேடையாம். விஞ்சையன் என்பான் விண்ணகத் தியங்குபவன் ஆவான், (2) 'அச்சுதன்' என்னும் சொல் திருமாலுக்கும் சோழனுக்கும் பொருந்துவதால் சிலேடையாம். அது திருமாலுக்காங்கால் மாயனலன்(மாயஞ் செய்யான்) என்னும் தொடருடன் முடிதல் விரோதமாய் இருத்தலின் விரோதச்சிலேடையாம் , (3) நிறை வான் கலையான் என்னும் தொடர் சந்திரனுக்கும் சோழனுக்கும் பொருந்துவதால் சிலேடையாம் அது சோழனுக்காங்கால் களங்கள் (களங்கத்தை யுடையவன்) என்னும் சொல்லோடு முடிதல் விரோதமாய் இருத்தலின் விரோதச் சிலேடையாம். (4) `நீதி இறையான்' என்னும் தொடர் இறைவனுக்கும் சோழனுக்காங்கால் அகன (தீவினை யுடையவன்) என்னும் சொல்லுடன் முடிதல் விரோதமாய் இருத்தலின் விரோதச் சிலேடை ஆயிற்று.

(7) அவிரோதச்சிலேடை என்பது முன்னர்ச் சிலேடித்த பொருளைப் பின்னர் விரோதியாமல் சிலேடிப்பது.

எ-டு: சோதி யிரவி கரத்தான் இரவொழிக்கும்
மாதிடத்தான் மன்மதனை மாறழிக்கும்-மீதாம்
அனகமதி தோற்றக் குமுதம் அளிக்கும்
தனதன் இருநிதிக்கோன் தான்'

இ-ள்: ஒளியினை உடைத்தாகிய ஆதித்தன் தன் கதிர்களாலே இருளை நீக்குவான்; புகழை உடையனாய் இரவிகுலத்தில் தோன்றிய இரவி என்னும். பெயரினையுடையனாய் சோழன் கைகளாலே பிறருடைய வறுமையைத் தீர்ப்பான்; உமாதேவியை இடப்பாகத்திலுடையான் காமனைமாறாக்கி அழிப்பான்; இவன் மிகுந்த திட்பம் உடையனாதலால் மன்னவர் வலியினை மாறுகொண்டு கெடுப்பான்; ஆகாயத்தில் தோன்றிய குற்றமற்ற மதி உதயஞ் செய்து குமுதங்களை அலர்த்தும்; இவன் மேலாய குற்றமற்ற அறிவு தோன்றிப் பூதலத்துக்கு ஏற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பான்; குபேரன் தனதன் என்னும் பெயரை உடையவனாய் இருநிதிக்குத்தலைவனாவான்; இவனும் பிறருக்குப் பொருளை அளித்துமிக்க பொருளுக்குமுதல்வன் என்னப்படுவான்.