பக்கம் எண் :
 
174தண்டியலங்காரம்

3. சொல்லணியியல்

மடக்கு

91. எழுத்தின் கூட்டம் இடைபிறி தின்றியும்
பெயர்த்தும்வேறு பொருள்தரின் மடக்கெனும் பெயர்த்தே.

என்பது சூத்திரம். இவ்வோத்து என்னபெயர்த்தோவெனின், சொல்லானாம் அணிகளது இயல்பு உணர்த்தினமையிற் சொல்லணியியல் என்னும்பெயர்த்து. அஃதேல் குற்றமும் குணமும் ஈண்டே யன்றேகூறியது; இதனைச் சொல்லணியியல் என்றது என்னை?எனின், அவையுங் கூறினாரேனும், அவை சிறுபான்மையஆகலானும், இத்துணைச் சிறப்புடையன அன்மையாலும்,சொல்லானாம் அணிகளது தலைமையும், பன்மையும்நோக்கி அப்பெயர்த்தாயிற்று என்பது. என்னை?

'ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத்
தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்'

(தொல் - சொல் - 49)

என்பவாகலின்.

இவ்வோத்தினுள் இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பொதுவகையான் மடக்கு என்னும் அலங்காரம்உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள் : எழுத்துக்களது தொகுதி, பிறஎழுத்தானும், சொல்லானும், இடையிடாதும்இடையிட்டும் வந்து, பெயர்த்தும் வேறு பொருளைவிளைப்பது மடக்கு என்னும் அலங்காரமாம் எ - று.

எழுத்துக்களது தொகுதி எனவே, இரண்டு முதல் எனைத்துஎழுத்தானும் வருமெனக் கொள்க. 'பிறிதின்றியும்'என்பது எதிரது தழீஇய எச்சவும்மை. 'பெயர்த்தும்'என்பது இறந்தது தழீஇய எச்சவும்மை. மடக்கு - யமகம்;அஃதாவது, வந்த சொல்லே வருதல்.

(வி - ரை) : 'ஒருபெயர்ப் பொதுச்சொல்' என்றநூற்பாவின் கருத்து:- பல பொருட்கும்பொதுவாகியதொரு இடத்தையோ, அன்றிப் பொருளையோஅப்பொதுமையினின்றும் நீக்கிச் சிறப்புச்சொல்லாற் கூறின், அது ஒருபெயர்ப் பொதுச்சொல்எனப்படும். அத்தகைய சிறப்புச் சொல்தலைமைபற்றியோ, அன்றிப் பன்மைபற்றியோஅமையும். இந்நெறி இருதிணைக்கும் ஒக்கும் என்பது.இவ்வியலில் சொல்லணிகள், வழுக்கள், மலைவுகள்இவற்றிற்குரிய அமைதிகள் அனைத்தும்சொல்லப்பட்டுள்ளன. இங்ஙனம் பல பொருளையும்கூறும் இவ்வியலுக்குச் சொல்லணியியல் என்றுஒன்றற்குரிய பெயரைக் கொடுத்தல்பொருத்தமின்றேனும், மேற்காட்டிய இலக்கணவிதிப்படி ஏனையவற்றினும் சொல்லணிக்குத்தலைமையும் சிறப்பும் உளவாதலின் அவ்வகையால்பொருத்தமாயிற்று என்பதாம்.