பக்கம் எண் :
 
சொல்லணியியல்177

2. மூன்றடி மடக்குகளில் வருவன : -

(1). ஈற்றடி யொழித்து ஏனைமூன்றடியில் மட்டும் மடங்கி வருவது - கூழை.
   (2). முதலடி, மூன்றாம் அடி, நான்காம் அடியில்மட்டும் மடங்கி வருவது - மேற்கதுவாய்.
   (3). முதலடி, இரண்டாம் அடி, நான்காம் அடியில்மட்டும் மடங்கி வருவது - கீழ்க்கதுவாய்.

3. நான்கடியிலும் வரும் மடக்கு : -முற்று மடக்கு.

இவை ஏழும் ஒழிந்த நான்குமடக்குகள் இவ்விணை முதலாய விகற்பத்தைஏலாதனவாம்.

இப்பதினைந்து மடக்குகளும், மேல்93 ஆம் நூற்பாவில் கூறப்பட்ட ஏழு கூறுபாட்டோடும் வர(15 x 7 = 105) நூற்றைந்து மடக்குகளாகும். இந்தநூற்றைந்தும், இடையிட்டு வருவன, இடையிடாது வருவன,இடையிட்டும் இடையிடாதும் வருவனவாகியமூவகையோடும் விகற்பிக்க (105 x 3 = 315)முந்நூற்றொருபத்தைந்து மடக்குகளாகும்.

அவற்றுள் சில வருமாறு : -

1. ஓரடி முதன்மடக்கு

(1) முதலடி முதன்மடக்கு

எ - டு :

'துறைவா துறைவார்பொழிற்றுணைவர் நீங்க
உறைவார்க்கும் உண்டாங்கொல்? சேவல் - சிறைவாங்கிப்
பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள்வாய்
வாடைக் குருகா மனம்'

இ - ள் :நெய்தல்நிலத் தலைவனே! துறையின்கண்பெருத்திருக்கப்பட்ட பொழிலிடத்துத் தலைவர்பிரியத் தனித்திருப்பார்க்கும் உண்டாகுமோ?சேவற்குருகானது தன் சிறகை வளைத்துப் பேடைக் குருகைஇறுகப்புல்லும் மிக்க இருளினையுடைய யாமத்துக்கண்வாடைக் காற்று வந்தால் கரையாத மனம் எ - று.

இதில் முதலடி முதலில், 'துறைவா துறைவா' என ஒரேசொல் மடங்கி வந்தமை காண்க.

(வி - ரை) இப்பாடல் தலைவிபிரிவிடையாற்றாள் எனத் தோழி தலைவற்குஉரைத்ததாகும். துறைவா - நெய்தல் நிலத்தவனே!,பெயர்விளி. துறை - கடல் துறையினிடத்து. வார் -பெருத்திருக்கப்பட்ட.

 (2) இரண்டாமடி முதன்மடக்கு

எ - டு ;

'கனிவா யிவள்புலம்பக்காவல!நீ நீங்கில்
இனியார் இனியார் எமக்குப் - பனிநாள்
இருவராத் தாங்கும் உயிரன்றி எங்குண்(டு)
ஒருவராத் தாங்கும் உயிர்?

இ - ள் ;கனிபோன்ற மொழியினை யுடைய இவள் புலம்பும் படிஅரசனே! நீ பிரிந்த காலத்து எங்களுக்கு இனியராய்இனி