மையான சொற்களைச் சொல்லிக் காக்குந்தலைவர் இனி யாவர்? பனிக்காலத்துத் தம்மிற்புணர்ந்து பிரியாதிருந்த இருவரும் கூடித் தாங்காநிற்கும் உயிரல்லது, ஒரு திறத்தாராகப்பிரிந்திருந்த மடவார் தாங்கும் உயிர்எக்காலத்து எவ்விடத்து உண்டு சொல்வாயாக! எ - று. இதன் இரண்டாமடியில் 'இனியார் இனியார்' என ஒருசொல் மடங்கி வந்தமை காண்க. (வி - ரை) இப்பாடல் தோழி, தலைமகற்குத்தலைவியது ஆற்றாமை கூறிச் செலவழுங்குவித்ததாகும்.முன்னது இனியார் என ஒரு சொல்லாய்ப் பொருள்கொள்ள நின்றது; பின்னையது இனி யார்? எனப்பிரித்துப் பொருள் கொள்ள நின்றது. (3) மூன்றாமடி முதன்மடக்கு எ - டு : | 'தேங்கானல் முத்தலைக்குந் தில்லைப்பெருந்தகைக்கு | | ஓங்காரத் துட்பொருளாம் ஒண்சுடர்க்கு - நீங்கா | | மருளா மருளா தரித்துரைக்கும் மாற்றம் | | பொருளாம் புனைமாலை யாம்' |
இ - ள் : தேனையுடைத்தாகிய கழிக்கானற்கண் உண்டாகிய முத்தம்வந்தலைக்கப்படாநின்ற தில்லை மூதூர்ப்பெரியோனுக்குப் பிரணவத்தின்உட்பொருளாயிருக்கப்பட்ட ஒள்ளிய சோதிவடிவாகிய கடவுளுக்கு இடையறாத ஆசையாகியமயக்கத்தினை மேற்கொண்டு ஒருவன் சொல்லுகிறஅறிவழிந்தசொல் பொருளுமாம்; பூணப்பட்டமாலையுமாம் எ - று. இதன் மூன்றாமடியில் 'மருளா மருளா' என்று ஒருமொழிமடங்கி இருத்தல் காண்க. (வி - ரை) இப்பாடற்கண் உள்ள மருளா, மருளாஎன்னும் சொற்களுள் முன்னையது மருள் ஆம் எனவும்,பின்னையது மருள் ஆதரித்து எனவும் பிரித்துப்பொருள் கொள்ள நின்றன. தில்லைப் பெருமான்மீதுஆசையாகிய மயக்கம் கொண்டு உரைக்கும் சொல்என்பது பக்தி கொண்டு உரைக்கும் சொற்களாகும்.தன்னை மறந்து தன்னாமம் கெட்டுத் தலைவன்தாளிலேயே தலைப்பட்டு உரைக்கும் சொற்கள்இறைவனிடத்து அன்பு பூண்டொழுக வேண்டுவார்க்குச்சிறந்த பொருளுரையாகும். இறைவன் பக்தி வலையிற்படுவோன் ஆதலின் அச்சொற்கள் அவனுக்குமாலையுமாகும். (4) ஈற்றடி முதன்மடக்கு எ - டு : | 'இவளளவுந் தீயுமிழ்வ(து)என்கொலோ தோயும் | | கவள மதமான் கடத்தின் - திவளும் | | மலையார் புனலருவி நீயணுகா நாளில் | | மலையா மலையா நிலம்' |
இ - ள் : தலைவனே! நீ இவளை வந்துஅணையாத போது, கவளத்தை யுண்ணும் மதயானையின்கவுளிடத்துத் தோயும் மதநீரைப் போலப் பெருகிப்புரண்டு பாறை நிரம்பி வரும் நீரருவிகள்மோதாநிற்கப்பெற்ற பொதியமலைக்கண்ணே பிறந்துஎல்லார்க்கும் குளிர்ச்சியைச் செய்கின்ற
|