இதன் மூன்றாமடி முதலில் 'வரையா வரையா' எனவும், நான்காமடி முதலில்'விரையா விரையா' எனவும் மடங்கினமை காண்க. (வி - ரை) இது தோழி தலைவற்கு ஆற்றது இன்னாமைகூறி வரவு விலக்குவித்ததாகும். யாதும் வரையா -கொல்லுதல், கொல்லாமை என்னும் வரையறை யின்றி,யாவற்றையும் கொல்ல வல்ல. வரை ஆம் எனும் மா மதமா- மலை என்னும் படியான பெரிய மதம் பொருந்தியயானை. இரையா - இரையாக. 'இரையாக' என்பது 'இரையா'எனக் குறைந்து நின்றது. இரையா - இரைத்து (ஒலித்து). (5) இரண்டாமடியும்மூன்றாமடியும் முதன்மடக்கு எ - டு : | 'குரவார் குழலாள் குவிமென் முலைதாம் | | விரவா விரவாமென் தென்றல் - உரவா | | வரவா வரவா மெனநினையாய் வையம் | | புரவாளர்க்(கு) ஈதோ புகழ்' |
இ - ள் ; குராம்போதினையுடைய குழலாள்ஆகத்துத் திரண்ட மெல்லிய முலையின்மேல் நீ கூடாதஇரவின்கண் உண்டாகிய மெத்தென்ற தென்றல் வரவுஅதனைப் பாயும் பாம்பாகுமென நினையாதேபிரிகின்றாய், தலைவனே! வையங் காவலைப் புரிந்ததலைவற்கு இதுவோ புகழ் எ- று. இதன் இரண்டாமடிமுதலில் 'விரவா விரவா' எனவும், மூன்றாமடி முதலில்'வரவா வரவா' எனவும் மடக்குகள் வருதல் காண்க. (வி - ரை)இதுபிரிவின்கண் தோழி, தலைவற்குத் தலைவியதுஆற்றாமை கூறிச் செலவழுங்குவித்ததாகும். விரவா -கலவாத; கூடாத. இரவு ஆம் - இரவில் தோன்றுகின்ற.தென்றல் வரவு எனக் கூட்டுக. வரவு அரவாம் - பாயும்பாம்பாகும். (6) இரண்டாமடியும்ஈற்றடியும் முதன்மடக்கு எ - டு : | 'மழையார் கொடைத்தடக்கை வாளபயன்எங்கோன் | | விழையார் விழையார் மெல்லாடை - குழையார் | | தழையாம் உணவுங் கனியாம் இனமு | | முழையா முழையா முறை' |
இ - ள் ; மழை போன்று மிகக் கொடுக்கவல்லபெரிய கையினையும், ஒளியினையும் உடைய அபயனாகியஎம்மரசனைப் பகைத்தவர் விரும்பி உடுக்கின்றஅரிய மெல்லிய ஆடை தளிரார்ந்த தழையாம்; உணவும்கனிகளாம்; அவர்களுக்குச் சுற்றமும் மான்களாம்;இருப்பிடமும் மலைக்குகையாம் எ- று. இதன் இரண்டாமடிமுதலில் 'விழையார் விழையார்' எனவும், ஈற்றடிமுதலில் 'முழையா முழையா' எனவும் மடக்குகள் வந்தமைகாண்க. இவை ஆறும் ஈரடிமுதன்மடக்கு. (வி - ரை)இதுஅனபாயனின் படை வீரன் ஒருவன் அவனுடைய மறத்தைஎடுத்துரைப்பதாகும். விழையார் - விரும்பாதவர்;பகைவர். விழை ஆர் - விருப்பத்தைத் தருகின்ற.உழையாம் - மானாம். முழை ஆம் - குகையாகும்.
|