(வி - ரை)இது பிரிவிடை ஆற்றாத தலைவியின் நிலைகண்டு தோழி கூறியதாகும். காந்தளே! மாலையானது வரும், மேகங்களும் எழும், முல்லைக் கொடிகளும் தலைவரைக்காட்டிலும் பகையாயுள்ளன, ஆனிரைகளோ எங்கள் நிறையைக் கவர்ந்துள்ளன, ஆதலின் நீயும் கவராதே எனத் தோழி கூறியதாகக் கொள்க. நிரையாஎன்பதை ஆநிரை என மாற்றுக. நிரையாம் மணி - ஒழுங்காக ஒலிக்கும் மணியோசை. நிறை கோடல் - நிறையைக் கவராதே; அல்லீற்று எதிர்மறை. நிறை - காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம். கோடல் - காந்தள். வரையா அரையாம இருள் எனப் பிரிக்க. வரையா - அளவிடற்கரிய. இருள் முன்மாலை மாலை வரும் எனக் கூட்டுக. மாலை - மயக்கம்; மாலைப்பொழுது. விரையா - விரைந்து. இரையா - இரைத்து; ஒலித்து. மேக மேகம் - மேகங்கள்; அடுக்குப்பன்மை குறித்தது. உரையா - ஒன்றும் சொல்லாத. உரையார் - புகழையுடையார். உரை புகழாதல் 'உரையும் பாட்டும் உடையோர் சிலரே' (புறம் - 27) என்பதனானும் அறிக. முல்லை முல்லை என்பவற்றுள் முன்னையது நிலத்தையும், ஏனையது மலரையும் குறித்தன. ஒழிந்தஆதியோடு கடைமடக்காவன: - ஓரடி ஆதியோடு கடைமடக்கு நான்கும், ஈரடி ஆதியோடு கடைமடக்கு ஆறும், மூவடி ஆதியோடு கடைமடக்கு நான்குமாம். இடைக்கண்ணும் இறுதிக்கண்ணும் முற்றுமடக்கு எ - டு : | 'வருகம் புளினம் புளினம்பயில் வேலை வேலை | | ஒருகால் உலவா வுலவாவரு மோத மோத | | வருகே தகைகே தகைசேர்தரு மன்ன மன்ன | | பெருகா தனவே தனவேரசை மாதர் மாதர்' |
இ - ள் : வாராநின்ற கம்புட் குழாங்கள் மணற் குன்றுகளிலே இருக்குங் காலத்தில், கடலானது ஒருகாலுங் குறையாது உலாவிக் கரையை மோதவரும்; அருகே நின்று தடுக்கப்பட்ட தாழை மீதே அன்னங்கள் சேரும்; ஆதலால் தலைவனே! முலைகளினது அழகழியும் மடவாருடைய காதல் பெருகாதொழியுமோ எ- று.இதில்'புளினம் புளினம்', 'வேலை வேலை' என முதலடியின் இடையிலும் ஈற்றிலும், 'உலவா வுலவா', 'மோத மோத' என இரண்டாமடியின் இடையிலும் ஈற்றிலும், 'கேதகை கேதகை', 'மன்ன மன்ன' என மூன்றாமடியின் இடையிலும் ஈற்றிலும், 'தனவே தனவே', 'மாதர் மாதர்' என நான்காமடியின் இடையிலும் ஈற்றிலும் மடக்குகள் வந்தமை யுணர்க. ஒழிந்தஇடையோடு கடைமடக்கு வந்தவழிக் கண்டு கொள்க. (வி - ரை)இது பிரிவின்கண் செல்லும் உள்ளத்தனாய தலைவனிடத்துத், தோழி தலைவியது ஆற்றாமை கூறிச் செலவழுங்குவித்தது ஆகும். வருகம்புள் இனம் புளினம் எனப் பிரித்துப் பொருள் கொள்க. கம்புள் இனம் - சம்பங் கோழிகள். புளினம் - மணற்குன்று. வேலை வேலை
|