பக்கம் எண் :
 
194தண்டியலங்காரம்

(3) இடை யீரடியும் மடக்கு

எ - டு :

'கருமாலை தொறுகாதல் கழியாது தொழுதாலும்
உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்
உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்
வருமாய வினைதீர ஒருநாளும் அருளார் கொல்!'

 இ - ள் : கருமாலை தொறும் - பிறவித் தொடர்ச்சிதோறும், காதல் கழியாது - அன்பு நீங்காது, தொழுதாலும் - தம்மை வணங்கினாலும், உருமாய - வடிவு அழியும்படி, மதன் ஆகம் அடுமாறு புரிவார் - காமன் உடலைக் கெடுக்கும் தன்மையைச் செய்வார், முன் - முன்னே, உருமு ஆய - உருமுப் (இடி)போல வந்த, மதன் நாகம் - கடாத்தை யுடைய யானையை, அடுமாறு புரிவார் - கொல்லும் இயல்பினை யுடையார், முன் வரும் - தொல்லையாய் வரும், மாய வினை தீர - வஞ்சவினை நீங்க, ஒரு நாளும் அருளார் கொல் - ஒருகாலமும் எமக்கு அருளார் போலும் எ - று.

இதில் 'உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்' என்ற சொற்றொடர், இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் முற்றும் மடங்கி வருதல் காண்க.

(வி - ரை) இன்ப துன்பத்தை யழித்தவர், என்னுடைய இருள்சேர் இருவினையையும் நீக்கார் போலும்! என்பது கருத்து.

(4) முதலடியும் ஈற்றடியும் மடக்கு

எ - டு :

'மறைநுவல் கங்கை தாங்கினார்
நிறைதவ மங்கை தாங்கினார்
குறையென வண்டர் வேண்டவே
மறைநுவல் கங்கை தாங்கினார்'

இ - ள் : மறைநுவல் - வேதம் புகழும்படியான, கங்கை தாங்கினார் - கங்கா நதியைத் தரித்தார், நிறை தவ - மிக்க தவத்தையுடைய, மங்கை தாங்கினார் - உமாதேவியை இடப்பாகத்தில் தாங்கினார், குறையென - எமக்குக் குறை இதுவென்று, அண்டர் வேண்டவே - வானவர் தொழுது இரப்ப, மறை நுவல் - அற்றங்களைப் பிறர்க்கு உபதேசிக்கும், கம் - (பிரமன்) தலையைக், கை தாங்கினார் - கையிலே தாங்கினார் எ - று.

அற்றம் - இரகசியம். இதில் 'மறைநுவல் கங்கை தாங்கினார்' என்ற சொற்றொடர் முதலடியிலும் நான்காமடியிலும் மடங்கி வருதல் காண்க.

(5) கடை யீரடியும் மடக்கு

எ - டு :

'கொல்லியம் பொருப்பனை மேவார் கோநகர்
இல்லெரி மேவுவ தியம்ப வேண்டுமோ?
வல்லியந் தாமரை வனங்க ளாயின
வல்லியந் தாமரை வனங்க ளாயின'

 இ - ள் : கொல்லியம் பொருப்பனை - கொல்லிமலையையுடைய சேரனை, மேவார் - மேவாராகிய அரசர், கோநகர் இல் -