நீக்கப் பொருண்மையின்கண் வந்த ஐந்தனுருபுஆறனுருபாய் மயங்கின. இதனுள் 'நீக்கி' என்பதுவருவித்து உரைக்கப்பட்டது. (வி - ரை) ராகம் - ஆசை. வாநத்து அதந - மேகத்தினும்மிகுதியாகக் கொடுப்பவன். தாதா - வள்ளல். (11) சருப்பதோபத்திரம் என்பது ஒருநிரைஎட்டாக அறுபத்துநான்கு அறை கீறி, ஒரு செய்யுள்எவ்வெட்டு எழுத்தால் ஓரடியாக நான்கடி பாடி,மேல்நின்று கீழ் இழியவும் நான்கடியும் எழுதி,கீழ்நின்று மேலேறவும் நான்கடியும் எழுதி, மேல்நின்று கீழ்இழியவும், கீழ்நின்று மேலேறவும், முதல்தொடங்கி இறுதியாகவும், இறுதி தொடங்கிமுதலாகவும், மாலை மாற்றாக நான்கு முகத்தினும்வாசித்தாலும் அச்செய்யுளே யாவது. படம் எ - டு : | 'மாவா நீதா தாநீ வாமா | | வாயா வாமே மேவா யாவா | | நீவா ராமா மாரா வாநீ | | தாமே மாரா ராமா மேதா' |
இ - ள் : மாவா - பெரியோனே!, நீதா -நீதியுடையோனே!, தா நீவா மா - மிக்க நீங்காதசெல்வத்தை யுடையோனே!, யா ஆம் - என்னாகக் கடவது?,மேவாய் - பொருந்துவாயாக; வாயா ஆமே - (இப்படிஎன்னைச் சேர்ந்தால்) வாயாதன யாவை?, நீவா - நீவருவாயாக; ராமா - இராமனை யொப்பாய்!, மாரா -காமனுமாய் உள்ளாய்!, வான்நீ - மழையை யொப்பாய்!,நீ, தா மே - (ஆதலால்) பெரிய மேம்பாட்டையுடைய,மார் ஆர் ஆமாம்ஏ தா - நின் மார்பில்நிறைந்திருக்கப்பட்ட ஆராகிய தாரினைத்தருவாயாக எ - று.
|