| இது எட்டு ஆராய், ஆர்மேல் அவ்வாறெழுத்தாய்,நடுவே ககரம் நின்று, குறட்டின்மேல் ' அறமே தநமாவது'என்னும் சொல் நின்று, சூட்டின்மேல்முப்பத்திரண்டு எழுத்து நின்று முற்றுப் பெற்றது. (10) சுழிகுளம் என்பது ஒரு செய்யுளை எவ்வெட்டுஎழுத்தாய் நான்கு வரியாக எழுதி, மேல்நின்றுகீழ்இழிந்தும் கீழ்நின்று மேல்ஏறியும், புறநின்றுவந்து உள்முடிய உச்சரித்தாலும் அவ்வரிநான்குமேயாகி அச்செய்யுளாயே முற்றுப் பெறுவது. படம் எ - டு : | 'கவிமுதி யார்பாவே | | விலையரு மாநற்பா | | முயல்வ துறுநர் | | திருவ ழிந்துமாயா' |
இ - ள் ;கவி களால் முதிர்ந்தார்செய்யும் கவியே விலையிடுதற்கரிய கவி; இடைவிடாதுமுயல்வார் செல்வம் அழிந்து கெடாது எ - று. இதுவுமது எ - டு : | 'மதந விராகா வாமா | | தநத சகாவே நீவா | | நதத நதாதா வேகா | | விசந விரோதா காரா' |
இ - ள் : மதனா! ஆசை யில்லாதவனே! ஒளியையுடையானே! குபேரனுக்குத் தோழனாய் உள்ளானே!மேகத்தினும் அதனமான வள்ளலே! பணிப்பூணால் விரோதமான தோற்றத்தை உடையானே! நீ எங்கள் விதனங்களை நீக்கிக் காப்பாயாக எ - று.
|