பக்கம் எண் :
 
சொல்லணியியல்217

போரில் நமக்கு அபயங் கொடுத்த கண்ணாகியநீலப்பூவுக்கு ஒப்பாவனவல்ல, மிகக்குளிர்ச்சியையுடைய தாமரை மலரில் உறைவோட்குஒத்த பெண்களின் அகன்ற கண்கள் எ - று.

இது ஆறு ஆராய், நடுவே ரகரம் நின்று, ஆர்மேல்ஒன்பதொன்பது எழுத்தாய்க், குறட்டின் மேல் 'போதிவானவன்' என்னும் பெயர் நின்று, சூட்டின் மேல்இருபத்து நான்கு எழுத்து நின்று முற்றுப் பெற்றது.

எட்டாரைச் சக்கரம்

#######

எ - டு :

'மலர்மலி சோலை யகநலங் கதிர்க்க

மடமயி லியற்றக மாதிரம் புதைத்து

வளைந்து புகன்மேக வல்லிருண் மூழ்க

வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி

மன்னுமா மடமொழி வடிவாள் வளவன்

கன்னித் துறைவன் கனகச் சிலம்பே'

 இ - ள் : மலர் மிக்கிருந்த சோலையுள்நலம் விளங்க, மடப்பத்தோடு கூடியிருந்தமயிலியலுக்கு ஒக்கும்படியாகத் திசைகளை மறைத்துச்சூழ்ந்து மிக்க மேகங்கள் என்னா நின்ற வலியஇருளினாலே முழுகுந் தன்மைத்தாய், இசை மருவியவண்டுகள் குடையத்தகாநின்ற மலர்களைக்குழலின்மீதே அழகுபெற அணிந்து பொருந்தும்மடப்பத்தோடு கூடாநின்ற மொழியையுடையாள்; கூரியவாள் வளவனாகிய கன்னித்துறை வனது கனகமலையின்கண் எ - று.

இமய மலையின்கண், திசைகளை மறைத்து மேகஞ்சூழ்ந்து மலர் மலிந்து சோலைக்கு அழகு உண்டாகத்தன் குழலை அலங்கரித்து மயிலியல் ஒப்ப அழகு பெற்றமடப்பத்தோடு கூடிய மொழியாள் நிற்பள்எனக்கூட்டுக.