இதுவும் ஒருவகை நான்காரைச் சக்கரம் எ - டு : | 'மாதவா போதி வரதா வருளமலா | | பாதமே யோத சுரரைநீ தீதகல | | மாயா நெறியளிப்பா யின்றன் பகலாச்சீர்த் | | 1தாயே யலகில்லா டாம்' |
இ - ள் : போதி வரதா - புத்த தேவா!, அமலா - குற்றமில்லாதாய்!, பாதமே - (உன்னுடைய) பாதத்தை, ஓது அசுரரை - வழுத்தாநிற்கும் அசுரருக்கு, நீ தீது அகல மாயா நெறி அளிப்பாய் - நீ பாவங்கெட மோட்சம் அளிப்பாய்!, அன்பு அகலாச் சீர்த்தாயே - அன்பு நீங்காத அழகிய தாய்போல்வாய்!, அலகில் ஆடு ஆம் - எல்லை யில்லாத மிக்க வலிதாகிய, மா தவா - பெரிய தவத்தை யுடையாய்! இன்று அருள் - இன்று அருள்வாயாக எ- று. இதுவும் நான்கு ஆராய், நடுவே ரகரம் நின்று, குறட்டின் மேல் 'வசுதாரை' என்னும் பெயர் நின்று, ஆர் மேல் நந்நான்கெழுத்து நின்று, சூட்டின்மேல் இருபத்தெட்டு எழுத்து நின்று முற்றுப் பெற்றது. ஆறாரைச் சக்கரம் படம் எ - டு : | 'தண்மலர் வில்லிதன் போரன தஞ்ச நமக்களித்த | | கண்மலர்க் காவிக் கெதிர்வன வன்று கரமளந்த | | பண்மலர் யாழ்பயில் வாரன்பு சூழ்பதி நாகைமிக்க | | தண்மைய கத்துப் பதுமத்த மாதர்த் தடங்கண் களே' |
இ - ள் : கைகளால் தைவந்த விரிந்த பண்ணையுடைய யாழ்வல்லோர், அன்பு மேவிய நாகப்பட்டினத்தில், காமனுடைய
1. 'தாயலகில் லாத தவ' என்பதும் பாடம்.
|