பக்கம் எண் :
 
சொல்லணியியல்215

(வி - ரை)காதைகரப்பிற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு :-இவ்விரண்டன்கண்ணும் பிறிதொரு செய்யுட்கேற்றஎழுத்துக்கள் மறைந்து கிடக்கும் வகையில் ஒப்புமையிருப்பினும், முன்னையது இறுதிச் சொல்லை ஒழித்து,அதற்கடுத்துள்ள எழுத்துக்களிலிருந்துஒவ்வோரெழுத்தினை இடையிட்டு எடுத்துக்கொள்ளப்பிறிதொரு செய்யுளாய்த் தோன்றுவதாகும்; இதுபாட்டின் முதற்கண் இருந்தே எவ்விதவரையறையுமின்றி எழுத்துக்களைப் பொறுக்கிக்கோக்கப் பிறிதொரு செய்யுளாய்த்தோன்றுவதாகும்.

(9) சக்கரம் என்பது,சக்கர பந்தம். இது நான்காரைச் சக்கரம்,ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம் என மூன்றுவகைப்படும்.

அவற்றுள், நான்காரைச்சக்கரம்

படம்

எ - டு :

'மேரு சாபமு மேவுமே

மேவு மேயுண வாலமே

மேல வாமவ னாயமே

மேய னானடி சாருமே'

இ - ள் : மேருவை வில்லாகக்கொள்ளுவனவாயும், நஞ்சை உணவாக விரும்புவனவாயும்,உயர்ந்த உருவத்தை உடையனவாயும் இருக்கும்; அவன்விளையாடுதற்கு இனமாயுள்ள கூளியாகலான்,அத்தன்மையான் அடிகளைப் பொருந்துவீராக எ - று.

இது நான்கு ஆராய், நடுவே 'மே' என்னும் எழுத்துநின்று, ஆர்மேல் ஒவ்வோர் எழுத்து நின்று,சூட்டின்மேல் பன்னிரண்டெழுத்து நின்று முற்றுப்பெற்றது.

(வி - ரை) சக்கர பந்தம் - தேரினது உருள்போல்சக்கரம் வரைந்து, அதனுள் நடுவிடம்,ஆர்க்கால்கள், வட்டை ஆகிய இடங்களில் எல்லாம்,பாட்டின் எழுத்துக்களைப் பந்திப்பது (அடக்குவது)ஆகும். சூடு - வட்டை.