இ - ள் : தாயே - தாயாய் உள்ளாய்! யாம் நோவு -யாங்கள் வருந்தும், அவா ஈரு - அவாவினை நீக்கு; எமதுநீ - எமக்குச் சார்வாயுள்ள நீ, பின்னை வெருவாவருவது ஓர் - பின்பு அச்சமாக வருவது ஆராய்; அது தபஎம் புகல் வேறு இருத்தி வைத்திசின் - அது கெடஎமக்குப் புகலாயுள்ள இடம் வேறாகச் சமைத்துவைப்பாய்; இச்சை கவர் - ஆசைப்பாடு கைக்கொள்;தாவா அரும் கலம் நீயே - (எங்கட்குக்) கேடில்லாதஅரிய ஆபரணமாய் உள்ள கடவுளே! எ- று. இதனுட் போந்த செய்யுள் 'கருவார் கச்சித் திருவே கம்பத் தொருவா வென்னீ மருவா நோயே' என்பதாம். இ - ள் : மனமே! நீ கச்சித்திருவேகம்பத்து உறையும் ஒப்பில்லாதவனே என்றுசொல்லக் கருவார் நோய் மருவா எ - று. 'வருங்கலநீயே' என்பதில் லகரம் மொழிக்குமுதலாகாமையின், அதனை நீக்கிக் ககர முதலாகக்கொள்க. இதில் வேறொரு செய்யுளின் சொற்கள்மறைந்து நிற்றலால், இது காதைகரப்புஎனப்பட்டது. காதை - சொல்; கரப்பு - மறைவு. (வி - ரை) இப்பாடற்கண் உள்ள ஈற்று மொழி 'நீயே'என்பதாகும். அவ்வீற்று மொழிக்கு முன்னுள்ள எழுத்து'ல' என்பதாகும். அது மொழிக்கு முதலாகாமையின்,அதற்கு முன்னுள்ள 'க' என்பதை முதல் எழுத்தாகக்கொண்டு ஒவ்வோர் எழுத்து இடையிட்டு வாசிக்கப்பிறிதொரு செய்யுளாகும். ஒரு பாடலில், பிறிதொருபாடலுக்குள்ள சொற்கள் மறைந்து கிடத்தலின், இதுகாதை கரப்பு எனப் பெயர்பெற்றது. இனிக் 'காதை'என்பதற்குக் கவிதை எனப் பொருள் கொண்டு, ஒருசெய்யுளில் பிறிதொரு செய்யுள் மறைந்து நிற்பதுஎனக் கொள்ளினும் அமையும். (8) கரந்துறைச்செய்யுள் என்பது, ஒரு செய்யுள்பிறிதொரு செய்யுட்சொற் புகாது எழுத்துப்பொறுக்கிக் கொள்ளலாம்படி பாடுவது. எ - டு : | 'அகலல்குற் றேரே யதர மமுதம் | | பகர்தற் கரிதிடையும் பார்க்கின் - முகமதிய | | முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல | | மைத்தடங்கண் வெவ்வேறு வாள்' |
இ - ள் : நண்பனே! நான் கண்ட மாதருடையஉருவத்தன்மை கேட்பாயாக: அல்குலானது தேரினதுதட்டாயும், அதரமானது அமுதமாயும், இடையானதுவிசாரித்துச் சொல்லுவதற்கு அரிதாயும், முகமானதுமதியமாயும், முறுவலானது முத்தமாயும்,மைத்தடங்கண்ணானது நீலப் பூவாயும் வேறுபட வைத்தவாளாயும் இருக்கும் எ - று. இதனுட் போந்த செய்யுள், ‘அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு' (குறள் - 1) என்பதாம். இங்ஙனம், இதில் ஒரு செய்யுள் மறைந்துகிடத்தலால், இது கரந்துறைச்செய்யுள் ஆயிற்று.
|